என் எதிரே ரெண்டு பாப்பா.. ஷாலினியை ஓவர் டேக் செய்யும் அஜித்தின் மச்சினிச்சி..க்யூட்போட்டோஸ்!

சென்னை: நடிகை ஷாமிலி தனது அக்காவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் டிரெண்டாகி வருகிறது.

actress shamlee shared a picture with her sister shalini ajithkumar

அஞ்சலி, தைப்பூசம், போன்ற படங்களின் மூலம் மிகவும் பிரபலமான குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த ஷாமிலியின் அழகான சிரிப்பு, வசீகரமான முகம் நம் மனதில் நீங்கா இடத்தைப் பெற்றிருக்கிறது.

ஷாமிலி சிறுவயதில் நடித்த அனைத்து படங்களும் பலதரப்பட்ட மக்களையும் கவர்ந்து வந்தது.

நடிகை ஷாமிலி: ராஜநடை, அஞ்சலி, மலூடி போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான ஷாமிலி, துர்கா, தைப்பூசம், செந்தூர தேவி போன்ற சாமி படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் மணிரத்னம் இயக்கிய அஞ்சலி திரைப்படத்தில் மாற்றுத்திறனாளி குழந்தையாக நடித்த ஷாமிலி சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை பெற்றார்.

actress shamlee shared a picture with her sister shalini ajithkumar

தெய்வக்குழந்தை: இயக்குநர் ராமநாராயணன் இயக்கிய பல சாமி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான ஷாமிலி ரசிகர்களார் தெய்வக்குழந்தையாகவே பார்க்கப்பட்டார். ராமநாராயணன் இயக்கி துர்கா படம் இவர் நடிப்பில் வெளியாகி சக்கைப் போடு போட்டு வசூலை வாரி குவித்தது. இந்த படம் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

கதாநாயகியாக: குழந்தை நட்சத்திரமாக நம் அனைவருக்கும் பரிச்சயமான ஷாமிலி தெலுங்கில் வெளியான ஓய் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். தமிழில் விக்ரம்பிரபு நடித்த வீரசிவாஜி திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்திருந்தார். ஷாமிலி நடிகை மட்டுமில்லாமல் ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டவராகவும் இருந்தார். ஓவிய துறையில் மேதையான ஏ. வி. இளங்கோவின் வழிகாட்டலுடன் ஓவியம் வரைவதில் கவனம் செலுத்தி பல ஓவிய படைப்புகளை உருவாக்கி உள்ளார்.

actress shamlee shared a picture with her sister shalini ajithkumar

அஜித்தின் மச்சினிச்சி: அவ்வப்போது போட்டோஷூட் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ள ஷாமிலி. தற்போது தனது அக்கா ஷாலினியுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பேன்ஸ், அட ரெண்டு பேரில் யாரை பார்க்குறது என்றே தெரியவில்லையே என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும் இந்த போட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X