இளம் நடிகருடன் ரொமான்ஸ்.. விவகாரமான கதை.. விளக்கம் கொடுத்த முன்னணி நடிகை!

சென்னை : சீரியல் நடிகையான ஷனூர் சனம் பேகம் மெட்ரோல் காதல் என்ற ஆந்தாலாஜி தொடரில் விவகாரமாக நடித்ததற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

டோலிவுட்டில் பிரபல நடிகையான சனம், தமிழ், தெலுங்கு,மலையாளம் என 200க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

மூத்த நடிகையான இவர் அம்மா, அக்கா,அத்தை, பாட்டி என எந்த கதாபாத்திரத்திற்கும் கனகச்சிதமாக பொருத்திவிடுவார்.

நடிகை ஷனூர் சனம் பேகம்

நடிகை ஷனூர் சனம் பேகம்

தெலுங்கு சினிமாவில் மகேஷ் பாபு,ஜூனியர் என்டிஆர், நாக சைத்தன்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் சனம். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் என்ற சீரியலில் நடித்து தமிழ் ஆடியன்சுக்கு தெரிந்த முகமானார். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான க பெ ரணசிங்கம் படத்தில் கலெக்டராக நடித்துள்ளார்.

மெட்ரோ காதல்

மெட்ரோ காதல்

இவரது நடிப்பில் ஆஹா ஓடிடியில் ஒளிபரப்பான ஆந்தாலஜி திரைப்படம் தான் மெட்ரோ காதல். நான்கு வித்தியாசமான கதைகளை கொண்ட இந்த திரைப்படத்தில் ஒரு விவகாரமான கதையில் நடித்து சர்ச்சையில் சிக்கினார். இந்த கதாபாத்திரம் குறித்து அண்மையில் பேட்டி அளித்த சனம். அந்த, கதையில் மனைவியை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாத குடிகார கணவனால் வாழ்க்கையில் பலவிதமான துன்பங்களை அனுபவித்து ஆண்களே வெறுத்து ஒதுக்குகிறாள்.

தகாத உறவு

தகாத உறவு

இந்த சூழ்நிலையில், ஒரு பையனின் அறிமுகம் அந்த பெண்ணுக்கு கிடைக்கிறது. அவனுடன் தவறு செய்ய விரும்பவில்லை என்றாலும், அவருடன் தவறு செய்கிறாள். ஒரு பெண் தன்னுடைய ஆசைகளை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும் என்பதையும், கணவன் மனைவி மீது கவனம் செலுத்தாவிட்டால் அந்த பெண் வீட்டில் எப்படி நடந்து கொள்வார் என்பதையும் இந்த படம் வெளிவுபடுத்தி உள்ளது.

கதை பிடித்து இருந்தது

கதை பிடித்து இருந்தது

இந்த கதையில் வாழ்க்கையோடு உண்மையான நிகழ்வுகளுக்கு நெருக்கமாக இருந்ததால் அந்த கதாபாத்திரத்தில் நடித்தேன். எனவே அந்த செய்தியை மற்றவர்களுக்கு பகிர்வது முக்கியம் என்பதை நான் உணர்தேன். மேலும், மெட்ரோ காதலில் நடிப்பதற்கு மிக முக்கியமான காரணம், இயக்குர்ன் கருணா குமார் மற்றும் எழுத்தாளர் காதர் பாபு அவர்கள் கதை சொன்ன விதம் எனக்கு மிகவும் இருந்திருந்தது.

இதுபோன்ற கதையில் தொடர்ந்து நடிப்பேன்

இதுபோன்ற கதையில் தொடர்ந்து நடிப்பேன்

இது போன்று யதார்த்தமான கேரக்டர் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன். விமர்சனங்களை பற்றி எனக்கு கவலை இல்லை. சர்ச்சைகுரிய விஷயத்தை விளக்கும் போது விமர்சனங்கள் எழுத்தான் செய்யும். இந்த படத்தில் நடிக்கும் போதே இவ்வாறு விமர்சனம் எழும் என்று எனக்கு நன்றாகத் தெரியும் இருந்தாலும் , அந்த கேரக்டரை என்னால் வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X