கன்னடத்து கருப்புக் கிளி.. அட டிரஸ்ஸை சொன்னோமுங்க.. சொக்க வைக்கும் ஷான்வி!

சென்னை : கன்னட நடிகை ஷான்வி ஸ்ரீவத்சவாவின் கவர்ச்சி புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

தெலுங்கு திரையுலகில் இருந்து அறிமுகமாகி பின் நாளில் கன்னட திரையுலகிற்கு சென்று தனக்கென்று ஒரு தனி இடத்தை ஏற்படுத்தி கொண்டவர் தான் ஷான்வி ஸ்ரீவத்சவா தன் கல்லூரி பருவத்திலே தனது முதல் திரைப்படத்தில் நடித்தார் ஷான்வி.

Actress shanvi srivastava glamour photos

இவர் நடித்த இரண்டாவது தெலுங்கு படமான அட்டாவில் நடித்த கதாபாத்திரத்திற்காக இவரை பலரும் பாராட்டினர். பின் சர்ச்சைக்கு பெயர் போன இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் ரவுடி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

Actress shanvi srivastava glamour photos

அதே ஆண்டில் கன்னட மொழி படத்தில் கால் பதித்தார் ஷான்வி. இதில் இவர் நடித்த முதல் திரைப்படம் சந்திரலேகா. பின் 2015 ஆம் ஆண்டு சைய்மா விருதும் மற்றும் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார், இவர் கன்னடத்தில் நடித்த மாஸ்டர் பிஸ் படம் இவருக்கு கன்னட திரையுலகில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது.

Actress shanvi srivastava glamour photos

மற்றும் இவர் நடித்த தாராக் படத்திலும் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தினார் ஷான்வி ஸ்ரீவத்சவா இப்படத்திற்காகவும் இவர் விருது பெற்றார். மற்றும் ராஜ்குமார் மகன்களின் ஒருவரான சிவ ராஜ்குமார் நடித்த முப்தி திரைப்படம் வசூல் ரீதியாகவும் மற்றும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் இவரின் நடிப்பும் பேசப்பட்டது.

தற்போது கடந்த ஆண்டு இறுதியில் வெளியான அவனே ஸ்ரீமன் நாராயணா படத்தில் ஹீரோயின் ஆக நடித்தார் ஷான்வி ஸ்ரீவத்சவா. இப்படம் இவருக்கு தமிழிலும், மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது.

தற்போது இவரது கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. கருப்பு உடையில் படு கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தியுள்ளர் ஷான்வி. இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவது இவருக்கு வாடிக்கையாகிவிட்டது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X