ஊரடங்கை மீறி சென்ற சொகுசு கார்.. பாலத்தில் மோதி விபத்து.. ஆண் நண்பருடன் சென்ற ஹீரோயின் படுகாயம்!

By

பெங்களூரு: பாலத்தில் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஆண் நண்பருடன் சென்ற பிரபல நடிகை படுகாயமடைந்தார்.

பிரபல நடிகை ஷர்மிளா மந்த்ரே. சஜ்னி என்ற படம் மூலம் அறிமுகமான இவர், கன்னடத்தில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஆர்.மாதேஷ் இயக்கிய மிரட்டல் படத்தில் நடித்திருந்தார்.

ஆக்‌ஷன் காமெடி

ஆக்‌ஷன் காமெடி

இந்தப் படத்தில் வினய் ஹீரோவாக நடித்திருந்தார். சந்தானம், பிரபு, பிரதீப் ராவத், பாண்டியராஜன் உட்பட பலர் நடித்திருந்தனர். தெலுங்கில் விஷ்ணுவர்தன் பாபு, ஜெனிலியா நடிப்பில் வெளியான தீ படத்தின் ரீமேக் இது. ஆக்‌ஷன் காமெடி படமான இது கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியானது. ஆனால் பெரிய வெற்றியை பெறவில்லை.

சண்டக்காரி

சண்டக்காரி

இதையடுத்து, தமிழில் நடிக்காமல் கன்னட படங்களில் கவனம் செலுத்தி வந்த அவர், சில படங்களை தமிழில் தயாரித்தார். விமல், ஆஸ்னா ஜாவேரி நடித்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தை தயாரித்தார். இதையடுத்து இப்போது ஆர்.மாதேஷ் இயக்கத்தில் விமல், ஸ்ரேயா நடித்துள்ள சண்டக்காரி, அட்டக்கத்தி தினேஷ், தீப்தி சதி நடித்துள்ள நானும் சிங்கிள்தான் ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார்.

பாலத்தில் மோதியது

பாலத்தில் மோதியது

கன்னட படம் ஒன்றையும் தயாரித்து வருகிறார். கொரோனா காரணமாக இப்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை நடிகை ஷர்மிளா தனது ஆண் நண்பர் லோகேஷ் வசந்த் என்பவருடன் ஜாக்குவார் காரில் சென்றுகொண்டிருந்தார். பெங்களூரில் உள்ள ஹைகிரண்ட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட வசந்த் நகரில் வந்தபோது, பாலத்தில் மோதி திடீரென்று கார் மோதியது.

எலும்பு முறிவு

எலும்பு முறிவு

இதில் நடிகை ஷர்மிளா, படுகாயமடைந்தார். அவரது முகத்திலும் கையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது ஆண் நண்பரும் காயமடைந்தார். அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் அருகிள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

படுகாயமடைந்தனர்

படுகாயமடைந்தனர்

அவர்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து போலீசார் விபத்து நடந்த இடத்துக்கு சென்றனர். இதுபற்றி ஹைகிரவுன்ட் டிராபிக் போலீசார் கூறும்போது, வசந்த் நகர் பாலத்துக்கு கீழே இன்று காலை 3 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. எப்படி பாலத்தின் தூணில் கார் மோதியது என்று தெரியவில்லை. நடிகை ஷர்மிளா மந்த்ரேவும் அவர் நண்பர் லோகேஷ் வசந்தும் படுகாயமடைந்துள்ளனர்.

மது குடித்தார்களா?

மது குடித்தார்களா?

விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளோம். விபத்துக்குள்ளான காரை பறிமுதல் செய்துள்ளோம். மேலும் விசாரித்து வருகிறோம். அவர்கள் மது அருந்தி இருந்தார்களா என்ற விவரம் மருத்துவர்கள் கூறிய பிறகே தெரிய வரும் ' என்று தெரிவித்தனர். ஊரடங்கு நேரத்தில் காரை இயக்க சிறப்பு பாஸ் பெற்றிருக்க வேண்டும். ஆனால், அதைப் பெறாமல் இவர்கள் கார் ஓட்டிருப்பதால், அதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X