பிரபல நடிகைக்கு குடும்பத்துடன் கொரோனா பாதிப்பு.. டாக்டர் ஆலோசனைப்படி வீட்டில் தனிமை சிகிச்சை!

By

பெங்களூரு: பிரபல நடிகைக்கு குடும்பத்துடன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

Recommended Video

மிரட்டும் கொரோனா.. கலை நிகழ்ச்சிகளுடன் விழிப்புணர்வு ஏற்படுத்திய லயோலா கல்லூரி மாணவர்கள்!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் விரட்டி, மிரட்டி வருகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டு இருக்கிறது. இதை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்தாலும் இந்த வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

இந்த கொரோனா பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன் , ஐஸ்வர்யா ராய் ஆகியோர் இதன் பாதிப்புக்கு உள்ளாகி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டனர். நடிகர் விஷால், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி, நடிகை நிக்கி கல்ராணி, நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன், நடிகையும் எம்.பியுமான சுமலதா உள்பட பலருக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டது.

ஷர்மிளா மந்த்ரே

ஷர்மிளா மந்த்ரே

இந்நிலையில் நடிகை ஷர்மிளா மந்த்ராவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இவர், தமிழில் ஆர்.மாதேஷ் இயக்கிய 'மிரட்டல்' படத்தில் நடித்திருந்தார், கன்னட நடிகை ஷர்மிளா மந்த்ரே. இந்தப் படத்தில் வினய் ஹீரோவாக நடித்திருந்தார். தெலுங்கில் விஷ்ணுவர்தன் பாபு, ஜெனிலியா நடிப்பில் வெளியான தீ படத்தின் ரீமேக் இது.

தமிழில் தயாரித்தார்

தமிழில் தயாரித்தார்

முன்னதாக, சஜ்னி என்ற படம் மூலம் அறிமுகமான இவர், கன்னடத்தில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் நடித்துள்ளார். கன்னடத்தில் நடித்து வந்த அவர், சில படங்களை தமிழில் தயாரித்தார். விமல், ஆஸ்னா ஜாவேரி நடித்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு, மாதேஷ் இயக்கத்தில் விமல், ஸ்ரேயா நடித்துள்ள சண்டக்காரி, அட்டக்கத்தி தினேஷ், தீப்தி சதி நடித்துள்ள நானும் சிங்கிள்தான் படங்களைத் தயாரித்துள்ளார்.

கொரோனா சோதனை

கொரோனா சோதனை

தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது பற்றி நடிகை ஷர்மிளா கூறும்போது, 'நானும் என் குடும்பத்தினரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டோம். அதில் எனக்கும் குடும்ப உறுப்பினர் சிலருக்கும் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மருத்துவர் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

கார் விபத்து

கார் விபத்து

பெங்களூரில் வசித்து வரும் நடிகை ஷர்மிளா கடந்த ஏப்ரல் மாதம், அதிகாலையில் விபத்தில் சிக்கினார். இவர் சென்ற ஜாக்குவார் கார் பாலம் ஒன்றில் மோதியது. அதில் அவரும் அவர் நண்பரும் பலத்த காயமடைந்தனர். ஷர்மிளாவின் முகத்திலும் கையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X