ச்சீ.. என்ன ஆணவப்பேச்சு.. அசீங்கமா இல்லையா? சீமானை விளாசிய நடிகை ஷர்மிளா!
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக நடிகை புகார் அளித்திருந்தார். பின், அவரே இந்த வழக்கைத் திரும்ப பெற்றுக்கொண்டார். இருப்பினும், நடிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்தியத் தண்டனை சட்டம் 376வது பிரிவின்படி வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சீமான் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் முடிவில் இந்த வழக்கை12 வாரத்தில் முடிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, நேற்று சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார்.பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், வயசுக்கு வந்த உடனே குச்சுல உட்காந்துட்டு இருக்குற புள்ளைய, தூக்கிட்டுப் போய் சோளக்காட்டுல வச்சி குண்டுகட்டா , கதற கதற பாலியல் கொடுமை செய்துவிட்டேனா என பேசி இருந்தார்.

என்ன திமிர் பேச்சு: சீமானின் இந்த பேரும் சர்ச்சையாகி உள்ள நிலையில், அரசியல் விமர்சகரும், நடிகையுமான சர்மிளா, யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், சீமானின் செய்தியாளர் சந்திப்பை பார்த்த போது இரண்டு விஷயம் எனக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அவருக்கு எவ்வளவு திமிரு, ஆணவம், எகத்தாளம் இருந்தால் ஒரு செய்தியாளர் சந்திப்பில், ஒரு பாலியல் குற்றத்தை செய்தேன் என்று ஒத்துக் கொண்டு, அந்த விஷயத்தை சாதாரணமாக ஆக்க பார்க்கிறார். இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.அதுமட்டுமல்லாமல் சீமானின் அந்த செய்தியாளர் சந்திப்பில் பல பெண்கள் இருக்கிறார்கள். ஒன்று. அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள் இல்லை என்றால், ஏதோ சீமான் பெரிய நகைச்சுவை சொன்னது போல கைதட்டி சிரிக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது, எந்த அளவுக்கு இந்த சமுதாயம் சீமானால் கெட்டு சீரழிந்து இருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது.
சுயமரியாதை இல்லையா: அந்த செய்தியாளர் சந்திப்பில் இருந்த ஒரு பெண்ணுக்காவது சுயமரியாத இருந்திருந்தால், நாம் அந்த நடிகை இடத்தில் இருந்து, சீமான் நம்மை இப்படி பேசி இருந்தால் நாம் எப்படி பாதிக்கப்பட்டு இருப்போம் என்று ஒரு நிமிடம் யோசித்து இருக்க வேண்டும். அவரின் பேச்சைக் கண்டித்திருக்க வேண்டும் அங்கிருந்த ஒரு பெண்ணுக்கு கூடவா சுயமரியாதை இல்லை. சீமான் பேசுவதை பத்திரிகையாளர்கள் அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சீமான் என்ன வக்கிரமாக பேசினாலும், டிஆர்பிக்காக அனைவரும் அதை வீடியோவாக எடுத்து பதிவு செய்து வருகிறார்கள். இதுதான் பத்திரிகை அறமா? ஒரு பத்திரிக்கையாளராவது மிகவும் வன்மமாக இருக்கிறது, கொச்சையா பேசாதீர்கள் என்று தடுத்து இருக்க வேண்டும்
சீமான் நாட்டுக்காக என்ன செய்தார்: ஒரு பாலியல் குற்றவாளியான சீமான், காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வருவதை அத்தனை மீடியாக்களும் சூழ்ந்து கொண்டு வீடியோ எடுக்கிறார்கள். அவர், ஏதோ நாட்டிற்கு மிகப்பெரிய சேவை செய்தாரா, பத்ம பூஷன், பத்ம விபூஷன் விருதை பெற்றாரா? பின் எதற்கு மீடியாக்கள் இவர் பின்னால் அலைகிறது. நாம் தமிழர் கட்சியில் எத்தனையோ இளைஞர்கள் இருக்கிறார்கள்,அந்த இளைஞர்களுக்கு எல்லாம் சீமான் எப்படி ஒரு உதாரணமாக இருப்பார். அவரது வீட்டிலும் இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள் அவர்களும் இவரைப்பார்த்துத்தான் வளர்வார்கள். எனக்கு உண்மையில் சீமானை விட, அந்த செய்தியாளர் சந்திப்பில் கூட இருந்து கைத்தட்டியவர்கள் மீது தான் கோவம் அதிகமாக வருகிறது என்று சர்மிளா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











