2 திருமணம் செய்தும் கேட்க நாதியில்லை.. ஆதரவில்லாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெறும் இளம் நடிகை!

சென்னை: இளம் நடிகை ஒருவர் யாருடைய ஆதரவும் இல்லாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகைகள் சம்பாதிக்கும் காலத்தில் ஆடரம்பரமாக செலவு செய்துவிட்டு பின்னர் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவிக்கும் சம்பவங்கள் பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் அரங்கேறி வருகிறது.

சினிமாத்துறையை சேர்ந்த பல நடிகைகளும் நடிகர்களும் ஒரு வேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் பசியால் மரணித்த செய்திகளையும் கேட்டிருக்கிறோம். ஓஹோ என வாழ்ந்தவர்கள் மருத்துவ செலவுக்கு கூட காசில்லாமல் மற்றவர் உதவியை எதிர்பார்த்த செய்திகளும் ஆண்டுக்கு ஒரு முறையாவது வெளியாகி விடுகிறது.

நடிகை விஜயலட்சுமி

நடிகை விஜயலட்சுமி

அந்த வகையில் நடிகை விஜயின் ஃபிரன்ட்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை விஜயலட்சுமி தான் வறுமையால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி கதறல் வீடியோவை வெளியிட்டார். தமிழ் சினிமா தனக்கு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

பரவை முனியம்மா

பரவை முனியம்மா

அடுத்து பரவை முனியம்மாவும் மருத்துவ செலவுக்கு கூட பணமில்லாமல் பெரும் பாதிப்புக்கு ஆளானார். அவருக்கு தமிழ் சினிமாவை சேர்ந்தவர்கள் உதவி செய்தனர். மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

நடிகர் ராஜசேகர்

நடிகர் ராஜசேகர்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரணமடைந்த இயக்குநரும் நடிகருமான ராஜசேகர் கூட வறுமையில் சிக்கி தவித்ததாகவும் சிகிச்சைக்கு பணமில்லாமல் கஷ்டப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

நடிகை ஷர்மிலா

நடிகை ஷர்மிலா

இந்நிலையில் இளம் நடிகையான ஷர்மிளா, வறுமைக் காரணமாக கேட்க ஆளில்லாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகவல் வெளியாகியுள்ளது.

இவன் வேற மாதிரி

இவன் வேற மாதிரி

நடிகை ஷர்மிலா, தமிழில் நல்லதொரு குடும்பம் , உன்னை கண் தேடுதே, உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் இவன் வேற மாதிரி திரைப்படத்தில் நடிகை சுரபிக்கு அம்மாவாக நடித்திருந்தார்.

தனியாக வசிக்கிறார்

தனியாக வசிக்கிறார்

ஏற்கனவே திருமணமான அவர் முதல் கணவரை விவாகரத்து செய்தார். பின்னர் இரண்டாவது திருமணம் செய்த அவர், கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.

நடிகர் சங்கம் சார்பில்

நடிகர் சங்கம் சார்பில்

பட வாய்ப்புகள் இல்லாததால் குழந்தைகளுக்கு ஸ்கூல் பீஸ் கூட கட்ட முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார் ஷர்மிலா. அவருக்கு நடிகர் சங்கம் சார்பில் நடிகர் விஷால் உதவி செய்திருக்கிறார்.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனை

கீழ்ப்பாக்கம் மருத்துவமனை

இந்நிலையில் ஆர்த்தோ பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஷர்மிலா, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அட்மிட் ஆகும்படி கூறியுள்ளனர்.

யாரும் வரவில்லை

யாரும் வரவில்லை

இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறார் நடிகை ஷர்மிலா. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பார்க்கக்கூட யாரும் வரவில்லையாம்.

தனியாக தவிப்பு

தனியாக தவிப்பு

இதனால் எந்த ஆதரவும் இல்லாமல் தவித்து வந்த அவரை பக்கத்து பெட்டில் இருந்தவர்கள் நடிகை என அடையாளம் கண்டு உதவி செய்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X