இந்த மனசுதான் சார் கடவுள்.. சத்தமே இல்லாமல் நடிகைக்கு உதவி செய்யும் விஷால்!

சென்னை : நடிகர் விஷால் சத்தமே இல்லாமல் ஒரு நடிகைக்கு உதவி செய்து வருவது தற்போது தெரியவந்துள்ளதால், விஷாலின் ரசிகர்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர்.

செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 2004ஆம் ஆண்டில் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் விஷால்.

அதனை அடுத்து அவர் சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, சத்யம், தோரணை, அவன் இவன், வெடி உள்பட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

நடிகர் விஷால்

நடிகர் விஷால்

நடிகர், இயக்குநர் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருக்கிறார் நடிகர் விஷால். அவர் நடிப்பில் ஆக்ஷன்,எனிமி, வீரமே வாகை சூடும் போன்ற திரைப்படங்கள் வெளியாகின. வீரமே வாகை சூடும் திரைப்படம் ஒரு வித்தியாசமான கதை அம்சத்தை கொண்ட படமாக இருந்தாலும் அந்த படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.

லத்தி படத்தில்

லத்தி படத்தில்

இதையடுத்து, கடந்த மாதம் லத்தி திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. யுவன்சங்கர் ராஜா இசையில், சுனைனா, பிரபு, தலைவாசல் விஜய், முனிஷ்காந்த், ரமணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். லத்தி படத்தில் கான்ஸ்டபிளாக நடித்த விஷால் இப்படத்தின் படப்பிடிப்பின் போது பலமுறை காயமடைந்தார். இப்படத்தில் விஷாலின் நடிப்பை அனைவரும் பாராட்டினர்.

விஷாலின் 33வது படம்

விஷாலின் 33வது படம்

நடிகர் விஷால் தற்போது மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார். விஷாலின் 33வது படமான இப்படத்தில், நடிகர் எஸ் ஜே சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாக உள்ளது. சமீபத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்திற்காக புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் முகத்தை தன் மார்பில் பச்சை குத்திக்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார் விஷால்.

சத்தமே இல்லாமல் உதவி

சத்தமே இல்லாமல் உதவி

அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகை சார்மிளா, பட வாய்ப்புகள் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்ட போது, விஷால் செய்த உதவியை மறக்கவே முடியாது என்றும், நடிகர் விஷால், கடந்த ஆறு ஆண்டுகளாகவே தனது மகனின் படிப்புக்காக பண உதவி செய்து வருவதாக தெரிவித்திருந்தார். இணையத்தில் வெளியான இந்த தகவலால் ரசிகர்கள் விஷாலை பாராட்டி வருகின்றனர். நடிகை சார்மிளா மலையாளத்தில் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்

நடிகை சார்மிளா

நடிகை சார்மிளா

நடிகை சார்மிளா அறிமுகமான முதல் படமே மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது. அந்த படத்தில் மோகன் லாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பின் மலையாளத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்தார் சார்மிளா. முதலில் நடிகர் கிஷோர் சத்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் அவரை விவாகரத்து செய்தார். பின் இரண்டாவது திருமணம் செய்தார் அந்த திருமணமும் தோல்வியடைந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X