விஷாலை நைட் நீ தான் கூப்டியா? வேற நடிகையே இல்லையா? சுசித்ராவை விளாசிய சார்மிளா!

சென்னை: பாடகி சுசித்ரா, கார்த்திக் குமார் இல்லாத போது, கையில் ஒயின் பாட்டிலுடன் போதையில் வீட்டுக்கதவை தட்டினார். நான் கார்த்தி குமார் இல்லை என்று சொன்ன போதும், வீட்டிற்குள் வரவா என்று கேட்டார். நான் நோ என்று சொல்லிவிட்டேன் என்று கூறியிருந்தார். இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த சார்மிளா, சுசித்ராவை சரமாரியாக விளாசி உள்ளார்.

அதில், சுசித்ரா, நல்ல பாடகி, திறமையானவர், அழகானவர். ஆனால் அவர் ஏன் இப்படி பேசுகிறார் என்று தெரியவில்லை. அவர் எந்த உலகத்தில் இருக்கிறார். வைரமுத்து, தனுஷ் மற்றும் சில நடிகர்கள் குறித்து சுசித்ரா பேசி இருந்தார். அவர்களைப் பற்றி எனக்கு தெரியாது. ஆனால், விஷாலை பற்றி தவறாக பேசும்போது, எனக்கு கோபம் வருகிறது. ஏனென்றால், தனிப்பட்ட முறையில் எனக்கு விஷாலை பற்றி நன்றாகவே தெரியும்.

vishal suchitra sharmila

அது சுசித்ராவின் வேலை: பலமுறை பல youtube சேனலுக்கு போட்டி அளித்திருக்கும் சுசித்ரா, அப்பொழுதே விஷால் என்னிடம் மோசமாக நடந்து கொண்டார் என்று சொல்லி இருக்கலாமே. அதை விட்டுவிட்டு திடீரென்று இப்பொழுது விஷால் குறித்து பேச என்ன அவசியம். அதாவது, சோசியல் மீடியாவில் எந்த ஒரு செய்தி விவாதத்திற்கு வரும்போது, அதுபற்றி பேசுவதை சுசித்ரா அவர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார். அப்படித்தான் விஷால் குறித்தும் பேசி இருக்கிறார்.

சுசித்ரா பொய் சொல்கிறார்: சாதாரணமாக நாம், ஒரு நண்பர் வீட்டிற்கு போவதற்கு முன் போன் செய்து, வீட்டில் இருக்கிறீர்களா என்று கேட்டுவிட்டு தான் செல்வோம். ஆனால், விஷால் போன்ற ஒரு செலிபிரிட்டியான ஒரு ஆள் ஃபோன் எதுவும் செய்யாமல் திடீரென்று வந்தார், கையில் ஒயின் பாட்டில் வைத்து இருந்தார் என்று சொல்வதெல்லாம் நம்புற படியாக இல்லை. அது மட்டுமில்லை எத்தனையோ ஹீரோயின்கள் இருக்கிறார்கள், நடிகர் சங்கத்தில் தலைவராக இருக்கிறார். நல்ல இடத்தில் இருக்கும் நபர், கதவை தட்டினார் என்று சொல்வது நம்பும்படியாக இல்லை. ஒன்று சுசித்ராவே விஷாலை கூப்பிட்டு இருக்க வேண்டும், இல்லை என்றால் சுசித்ரா பொய் சொல்கிறார் என்று அர்த்தம்.

காரணம் என்ன: தனுஷ் வந்தார், வைரமுத்து தவறாக நடந்து கொண்டார் என அடுக்கடுக்காக அடுத்தவர்கள் மீது குறை கூறி வருகிறார் சுசித்ரா. இதற்கான ஆதாரங்களை அவர் தரவில்லை. சினிமாவில் எத்தனையோ நடிகைகள் இருக்கும் போது ஒரு பாடகியின் வீட்டுக்கு அனைவரும் செல்வதற்கான காரணம் என்ன? ஒரு நடிகையான என் வீட்டுக்கு யாரும் வருவதில்லையே? ஏனென்றால் நான் ஒரு குழந்தையின் தாய் என்று அனைவருக்கும் தெரியும், யாரையும் நான் வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டேன். வரவேற்பு இல்லாத வீட்டிற்கு யாரும் போக மாட்டார்கள், அப்படி அனைவரும் வருகிறார்கள் என்றால், அவர்களை வரவேற்கும் வகையில் நீங்கள் நடந்திருக்கிறீர்கள் என்று தான் அர்த்தம்.

ஒரு நல்ல மனிதர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கும், இந்த சூழ்நிலையில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தேவைதானா? அதுமட்டுமல்லாமல் இது போன்ற நபருக்காக கடவுளிடம் வேண்டுகிறீர்களா என்று கேட்டிருப்பது நியாயமா? அவர் அப்படி உங்களுக்கு என்ன கெடுதல் செய்துவிட்டார். சுசித்ரா சொல்வது எல்லாம் கற்பனை கலந்த கதை எதற்கும் ஆதாரம் இல்லை என்று சார்மிளா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X