Sharmili: 48 வயதில் கர்ப்பமான நடிகை ஷர்மிலி.. கவுண்டமணியால் பட வாய்ப்பு போச்சாம்! குமுறல்

சென்னை: நடிகை ஷர்மிலி ஆவாரம்பூ என்ற படத்தின்மூலம் தமிழில் அறிமுகமாகி தொடர்ந்து கவுண்டமணி உள்ளிட்ட காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர்.

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இவர் தற்போது வனிதா விஜயகுமார் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் தன்னுடைய கர்ப்பம், கவுண்டமணியின் செயல் உள்ளிட்டவற்றை பற்றி ஷர்மிலி பகிர்ந்துள்ளார். தன்னுடைய கேரியர் எப்படி, யாரால் பாதிக்கப்பட்டது என்பதையும் அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.

தன்னுடைய லேட் கர்ப்பம் குறித்து பேசிய நடிகை ஷர்மிலி: நடிகை ஷர்மிலி, தமிழில் ஆவாரம்பூ என்ற படத்தில் கவுண்டமணிக்கு ஜோடியாக அறிமுகமானார். கவுண்டமணி, விவேக், வடிவேலு, வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகிய காமெடி நடிகர்களுடன் இவர் அதிகமான படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக கவுண்டமணியுடன் மட்டும் 27 படங்களில் இவர் இணைந்து நடித்துள்ளார். இவர்களுடைய ஜோடி அப்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால், இருவர் குறித்தும் கிசுகிசுக்களும் அதிகமாக பரவியது.

Actress Sharmili opens up about her career and Pregnancy in late age

இதனால் கவுண்டமணியுடன் இனி நடிக்கக்கூடாது என்ற முடிவை தான் எடுத்ததாக நடிகை ஷர்மிலி தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். நடிகை வனிதா விஜயகுமார் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஷர்மிலி, தன்னுடைய பர்சனல் லைஃப் குறித்தும், கேரியர் பாதிப்பு உள்ளிட்டவை குறித்தும் பல்வேறு தகவல்களை பகிர்ந்துக் கொண்டார். கவுண்டமணியுடன் நடிப்பதை தான் தவிர்த்த நிலையில், இதையடுத்து, தான் அவருடன் கமிட்டாகியிருந்த அடுத்தடுத்த படங்களில் இருந்தும் தன்னை கவுண்டமணி தூக்கியதாக வேதனை தெரிவித்துள்ளார் ஷர்மிலி.

மேலும் மற்றவர்களுடனும் தான் இணைந்து நடிக்க முடியாதபடி கவுண்டமணி செய்துவிட்டதாகவும் இதனால் தன்னுடைய சினிமா கேரியரே முற்றிலும் முடங்கிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் தன்னுடைய 40வது வயதில் ஐடி துறையை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துக்கொண்ட ஷர்மிலி, தற்போது தன்னுடைய 48வது வயதில் தான் கர்ப்பமாக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார். தன்னுடைய இளம் வயதில் தான் குழந்தை பெற்றுக் கொண்டிருந்தால் எப்படி பார்த்திருப்பேனோ ஆனால் தற்போது தன்னுடைய குழந்தையை சிறப்பாக வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை தனக்கு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

48 வயதில் குழந்தை பெற்றுக் கொள்ளக்கூடாதா என்று கேள்வி எழுப்பியுள்ள ஷர்மிலி, தான் தற்போது மிகவும் கவனமாக செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார். இது ஷர்மிலியின் முதல் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குடும்பம் நடத்த குழந்தை பெற்றுக் கொள்ள வயது ஒரு தடையில்லை என்பதை ஷர்மிலி உணர்த்தியுள்ளதாக வனிதா விஜயகுமார் பாராட்டு தெரிவித்துள்ளார். குழந்தை பிறந்தவுடன் தன்னுடைய கணவரின் ஆதரவுடன் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடிக்க தான் திட்டமிட்டுள்ளதாகவும் ஷர்மிலி கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் மிகவும் கவர்ச்சியாகவும் கேரக்டர் ரோல்களிலும் ஷர்மிலி நடித்துள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்துவந்த ஷர்மிலி, ஒரு கட்டத்தில் காணாமல் போனார். இதனிடையே, தற்போது தன்னுடைய கேரியர் நாசமானது குறித்தும் அதற்கான காரணம் குறித்தும் அவர் மனம்திறந்து பேசியுள்ளார். இந்நிலையில், அவரது கர்ப்பம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X