கணவருடன் செம ரொமான்ஸ்.. ஒரே பாத் டப்பில்.. மாலத்தீவில் பிக்பாஸ் பிரபலம் லூட்டி!
மும்பை: பிரபல பிக்பாஸ் நடிகை மாலத்தீவில் தனது கணவருடன் லூட்டியடிக்கும் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.
ஷெஃபாலி ஜரிவாலா ஏராளமான இசை ஆல்பங்களில் நடித்துள்ளார்.
அவரது நடித்து வெளியான கண்டா லகா கேர்ள் என்று டான்ஸ் வீடியோ பெரும் ஹிட்டானது. இதனால் பெரும் பிரபலமனார் ஷெஃபாலி ஜரிவாலா.

இந்தி படங்கள்
இதனை தொடர்ந்து படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. முஜ்ஜே ஷாதி கரோஹி படத்தில் கெஸ்ட் அப்பீயரன்ஸ் கொடுத்தார ஷெஃபாலி. அதனை தொடர்ந்து ஹுதுகாரு என்ற படத்தில் நடித்தார்.

பிக்பாஸ் சீசன் 13
பின்னர் கன்னட மொழி படங்களிலும் நடிக்க தொடங்கினார் ஷெஃபாலி. இதனை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 13 நிகழ்ச்சியில் பங்கேற்றார். 36ஆம் நாள் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற ஷெஃபாலி 119ஆம் நாள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

விவாகரத்து
ஷெஃபாலி கடந்த 2005ஆம் ஆண்டு ஹர்மீத் சிங் என்ற இசையமைப்பாளரை திருமணம் செய்தார். ஆனால் இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2009 ஆம் ஆண்டு ஹர்மீத் சிங்கை விவாகரத்து செய்தார் ஷெஃபாலி.

பிகினியில் ஆட்டம்
அதன்பிறகு 2014ஆம் ஆண்டு நடிகர் பரக் தியாகியை திருமணம் செய்து கொண்டார் ஷெஃபாலி. இந்நிலையில் ஷெஃபாலி தனது கணவருடன் மாலத்தீவில் ஹாலிடேவை கொண்டாடி வருகிறார். அங்கு கணவருடன் பிகினியில் ஆட்டம் போடும் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார் ஷெஃபாலி.

கணவருடன் பாத் டப்பில்
இதேபோல் ஒரே பாத் டப்பில் தனது கணவருடன் அமர்ந்து ரொமான்ஸ் செய்துள்ளார் ஷெஃபாலி. இதேபோல் மோனேகினியில் போட்டில் பயணம் செய்துள்ளார். ஷெஃபாலி இந்த போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











