For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  என்னை என்னவேணா பேசுங்க.. என் குடும்பத்தை விட்ருங்க.. பிரேக்கப் விவகாரத்தில் பிரபல நடிகை கதறல்!

  |

  சென்னை: நடிகை ஷெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் கதறல் போஸ்ட் வைரலாகி வருகிறது.

  Sandy Man குத்தாட்டம் Dance Studio Inaguration | Sherin | DD | Tharshan | Kala Master

  நடிகை ஷெரின் செல்வராகவன் இயக்கத்தில் 2002ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

  அதனை தொடர்ந்து ஜெயா, ஸ்டூடன்ட் நம்பர் 1, விசில், கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனாலும் துள்ளுவதோ இளமை படத்தின் போது உருவான எதிர்பார்ப்பு அளவுக்கு அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

  எடை கூடிப்போய்

  எடை கூடிப்போய்

  பட வாய்ப்புகள் இல்லாததால் விக்ரமின் பீமா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். இந்நிலையில் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் நடிகை ஷெரின். நிகழ்ச்சியில் பங்கேற்ற போது ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் எடை கூடிப் போய் பல்க்காக இருந்தார்.

  தர்ஷனுடன் கொஞ்சல்

  தர்ஷனுடன் கொஞ்சல்

  ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி முடியும் போது எடை குறைந்து சிக்கென ஆகிவிட்டார் ஷெரின். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது சக போட்டியாளரும் மாடலுமான தர்ஷனை ஒரு தலையாக காதலித்தார் ஷெரின். இதுதொடர்பாக வனிதாவிடம், தர்ஷனை பார்க்கும் போது என்னையே நான் மறந்து விடுகிறேன் என்று தனது காதல் குறித்து பேசினார். பின்னல் டாஸ்க் என்ற பெயரில் தர்ஷன் மடியில் அமர்ந்து கொஞ்சினார்.

  காதல் முறிவு

  காதல் முறிவு

  அதோடு தர்ஷனுக்கு காதல் கடிதமும் எழுதினார் ஷெரின். அந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் வைரலானது. தர்ஷனுக்கு ஏற்கனவே வெளியில் காதலி இருக்கிறார் என்று தெரிந்தும் அவரை ஒரு தலையாக காதலித்தார். இதனால் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த தர்ஷன், தனது காதலியான சனம் ஷெட்டியுடன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் அவரை கழட்டி விட்டார்.

  நோ கல்யாணம்

  நோ கல்யாணம்

  இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சனம் ஷெட்டி தர்ஷன் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை கூறி வந்தனர். சனம் ஷெட்டியை திருமணம் செய்து கொள்ள முடியாது என திட்டவட்டமாக அறிவித்தார் தர்ஷன்.

  நிறைய செஞ்சுட்டீங்க

  நிறைய செஞ்சுட்டீங்க

  இந்நிலையில் ஷெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பக்கத்திற்கு கதறல் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டி இடையிலான காதல் முறிவை மறைமுகமாக குறிப்பிட்டே அவர் இந்த பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில் தெரிவித்திருப்பதாவது, கடந்த ஒரு மாதமாய் நிறைய பேசப்பட்டுவிட்டது, நிறைய செய்யப்பட்டுவிட்டது.

  குடும்பத்தை விட்டுவிடுங்கள்

  குடும்பத்தை விட்டுவிடுங்கள்

  யாராவது என்னைத் தாக்க வேண்டும் என்றால் தாராளமாக செய்யுங்கள், அதற்கு நான் கையெழுத்து போட்டு தருகிறேன். நீங்கள் என்னை மோசமான பெயர்களால் அழைப்பதை நான் சிரிப்புடன் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இதில் இருந்து என் குடும்பத்தை விட்டுவிடுங்கள். போலி அக்கவுண்டிகளில் மறைந்து கொண்டு அவர்களை வசைபாடுவதையும் ட்ரோல் செய்வதையும் ஏற்க முடியாது.

  பலவீனமாக நினைக்கவேண்டாம்

  பலவீனமாக நினைக்கவேண்டாம்

  யாரோ செய்த தவறுக்காக என்னை பழி சொல்வது, எனக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தாது. உங்களின் குறுகிய மனப்பான்மையும் குறுகிய பார்வையும் தான் வெளிப்படுகிறது. மற்றவர்கள் மீது முறையாக குறை சொல்ல கற்றுக் கொள்ளுங்கள். நான் அமைதியாக இருப்பதை என்னுடைய பலவீனமாக நினைக்க வேண்டாம். நான் இந்த விவகாரத்தில் நான் இல்லாததால் எதுவும் பேசாமல் இருக்கிறேன்.

  பெரிய பிரச்சனை இல்லை

  பெரிய பிரச்சனை இல்லை

  2 பேர் பிரேக் அப் செய்து கொள்வதை விடவும் பெரிய பிரச்சனைகள் இந்த உலகத்தில் உள்ளது. எனக்கு ஆதரவாய் நின்ற அனைத்து ஆதரவாளர்களுக்கும் நன்றி. தவறான கமென்ட்ஸ்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என நான் கேட்டுக் கொள்கிறேன். மக்கள் கோபமாக இருக்கிறார்கள். என்னுடைய கமென்ட் செக்ஷனில் கொட்டித்தீர்ப்பது அவர்களுக்கு அமைதியை கொடுக்கும் என்றால் அவர்கள் செய்யட்டும்.

  இனிமே பேசமாட்டேன்

  அது என்னையும் என்னுடைய கேர் வேல்யூஸையும் மாற்றாது. நான் ரொம்பவே அதிர்ஷ்டசாலி, உங்களை போன்றவர்கள் என்னிடம் சண்டை போடுவதற்கும் எனக்காக சண்டை போடுவதற்கும். இந்த விவகாரம் தொடர்பாக இதுதான் என்னுடைய அதிகாரப்பூர்வ ஸ்டேட்மேன்ட், இதுதொடர்பான கேள்விகளுக்கும் ரியாக்ஷன்களுக்கும் இனிமே இதுபோன்று நான் பதில் சொல்ல மாட்டேன். இவ்வாறு ஷெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  English summary
  Actress Sherin first time opens up Tharshan and Sanam shetty break up. She asked people to do not scold her family.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X