CWC4 :குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எலிமினேட் ஆன ஷெரின்.. நேராக அவர் சென்றது எங்கு தெரியுமா?

சென்னை :விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சியான குக் வித் கோமாளி தற்போது 4வது சீசனை துவக்கி சிறப்பாக நடத்தி வருகிறது.

இந்த நிகழ்ச்சி வாராவாரம் சிறப்பான டாஸ்க்குடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. எலிமினேஷன் சுற்றுகளும் தொடர்ந்து காணப்படுகிறது.

கடந்த வார நிகழ்ச்சியில் நடிகை ஷெரின் இந்த நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆனார். இதையடுத்து அவர் சென்ற இடம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Actress Sherin in Goa trip after elimination of Cook with comali season 4 show

கோவாவிற்கு சென்ற நடிகை ஷெரின் : விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூன்று சீசன்களை கடந்து தற்போது 4வது சீசனை சிறப்பாக நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஷெரின், ஷிவாங்கி, காளையன் என சிறப்பான குக்குகளும் புகழ், சுனிதா போன்ற கோமாளிகளும் கலக்கலான பர்பார்மென்சை கொடுத்து வருகின்றனர். நடுவர்கள் வெங்கடேஷ் பட் மற்றும் தாமுவும் இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய முக்கிய காரணமாக அமைந்துள்ளனர்.

Actress Sherin in Goa trip after elimination of Cook with comali season 4 show

கடந்த சீசன்களில் கோமாளியாக ரசிகர்களை கவர்ந்த ஷிவாங்கி, இந்த சீசனில் குக்காக மாறியுள்ளார். இந்த நிகழ்ச்சி மூலம் அவர் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும் அவருக்கு பட வாய்ப்புகளையும் பின்னணி பாடும் வாய்ப்பையும் பெற்றுத் தந்துள்ளது. இதேபோல இந்த நிகழ்ச்சி புகழுக்கும் நடிக்கும் வாய்ப்புகளை பெற்றுத் தந்துள்ளது. கடந்த சீசனில் அவர் குக் வித் கோமாளியில் அதிகமாக இடம்பெறாத நிலையில், தற்போதைய சீசனில் அவர் தொடர்ந்து பல்வேறு கெட்டப்புகளில் இடம்பெற்று வருகிறார்.

Actress Sherin in Goa trip after elimination of Cook with comali season 4 show

அடுத்தடுத்த வித்தியாசமான டாஸ்க்குகளுடன் ரசிகர்களை சந்தித்துவரும் இந்த நிகழ்ச்சி தற்போது அவுட்டோரிலும் கிராமத்து சமையலை ரசிகர்களுக்கு செய்து காட்டியது. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களை பரிதவிக்க செய்யும் எலிமினேஷன் சுற்றுகளும் சில வாரங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கடந்த வாரம் நடைபெற்ற எலிமினேஷன் சுற்றில் நடிகை ஷெரின் எலிமினேட் ஆனார். இந்நிலையில் எலிமினேட் ஆன ஷெரின் தற்போது கோவாவிற்கு சென்றுள்ளார்.

தன்னுடைய பிறந்தநாளை கோவாவில் மிகவும் சிறப்பாக ஷெரின் கொண்டாடியுள்ளார். அதன் புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு ஜாலியாக இருக்கச் சொல்லி ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதனிடையே, விரைவில் பெரிய நடிகர் ஒருவரின் படத்தில் ஷெரின் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோவாவில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய ஷெரீன் தனக்குத்தானே வாழ்த்துக்களையும் பகிர்ந்துக் கொண்டார்.

Actress Sherin in Goa trip after elimination of Cook with comali season 4 show

தனுஷின் துள்ளுவதோ இளமை படத்தின்மூலம் தமிழில் அறிமுகமான ஷெரின், தொடர்ந்து விசில், நண்பேண்டா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். மிகவும் குண்டாக மாறிய ஷெரின், தன்னுடைய உடலை சிறப்பாக குறைத்து, தற்போது ஸ்லிம்மாக அழகாக மாறியுள்ளார். இதனிடையே குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X