ஒய்யார நடைபோடும் அழகிய அசுரா ஷெரீன்...வைரலாகும் வீடியோ!

கோவை : பிக்பாஸ் புகழ் ஷெரீன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய அசுரா பாடலின் 2.0 வெர்ஷனை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Recommended Video

Sherin Samayal spicy Pepper Chicken | Bigg Boss • Celebrity Cooking ° Vijay TV

தமிழ் ரசிகர்களின் என்றும் எவெர்க்ரீன் கனவுக்கன்னியாக இப்போதும் வலம் வருபவர் நடிகை ஷெரின்.

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நம் அனைவரையும் துள்ளிக் குதிக்க வைத்த ஷெரின் தற்போது தமிழ் சினிமாவில் இரண்டாம் சுற்று வர தயாராகி வருகிறார்.

துடிக்க வைத்து

துடிக்க வைத்து

துள்ளுவதோ இளமை என தனது அழகின் மூலம் ரசிகர்களின் மனதை என்றும் துடிக்க வைத்து கொண்டு வருபவர் நடிகை ஷெரின். பெங்களூருவை பூர்வீகமாக கொண்ட இவர் தற்போது தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர்களின் பேராதரவுடன் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ‘

வருடங்களுக்கு தனது பெயர்

வருடங்களுக்கு தனது பெயர்

தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான படங்களின் மூலம் இந்திய அளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருபவர் இயக்குனர் செல்வராகவன். எதார்த்தமான கதைகளை கையாள்வதிலும், பல வருடங்களுக்கு தனது பெயர் சொல்லும் வகையில் பல திரைப்படங்களை உருவாக்குவதிலும் கில்லாடியான இயக்குனர் செல்வராகவன் தனது இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் ஷெரினை தமிழ் திரைத்துறைக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அனைவரின் ஆதரவு

அனைவரின் ஆதரவு

முழுக்க முழுக்க இளம் நடிகர்களை கொண்டு உருவான துள்ளுவதோ இளமை திரைப்படம் வெளியான போது அனைவரின் ஆதரவையும் பெற்று மிகப்பெரிய வெற்றி பெற்றது. இவ்வாறு தனது முதல் அறிமுகத்தை தமிழில் கொடுத்த ஷெரின் அதை தொடர்ந்து விசில், ஸ்டூடண்ட் நம்பர் ஒன் போன்ற படங்களின் மூலம் நம் அனைவரையும் ரசிக்க வைத்து வந்தார்.

கல்லூரிக்குள் பேய்

கல்லூரிக்குள் பேய்

இவ்வாறு பல படங்களில் பலமொழியில் நடித்து வரும் ஷெரின் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானது விசில் படத்தில் வரும் அழகிய அசுரா என்ற பாடலின் மூலம் தான், காதல் பிளஸ் திரில்லர் கலந்த படமாக உருவான விசில் திரைப்படத்தில் விக்ரமாதித்யா, காயத்ரி ரகுராம் மற்றும் விவேக் உடன் இணைந்து ஷெரின் நடிப்பில் கலக்கியிருப்பார். கல்லூரிக்குள் பேய் என மிகவும் வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்டு வெளியான இந்த விசில் திரைப்படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றி அடைந்தது.

அழகிய அசுரா

அழகிய அசுரா

விசில் படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆனபோதிலும் அழகிய அசுரா பாடல் ஷெரினுக்காகவே எழுதியது போல ரசிகர்களின் மனதில் நன்கு பதிந்து விட்டது. சில ஆண்டுகளாக நல்ல கதாபாத்திரம் ஏதும் கிடைக்காமல் தமிழ் சினிமாவில் நடிக்க முடியாமல் இருந்த இவர் தமிழில் மிகப்பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் மூலம் மீண்டும் தோன்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.

அசுரா பாடல் 2.0

அசுரா பாடல் 2.0

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ஷெரினின் ரசிகர் கூட்டம் மேலும் பல மடங்கு ஆனதை தொடர்ந்து இவரை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பின்பற்றுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகமாகி கொண்டே வருகிறது. இந்நிலையில் தன்னைப் பின் தொடர்ந்து வரும் ரசிகர்களுக்காக விதவிதமான புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வரும் ஷெரின் தற்பொழுது அழகிய அசுரா பாடல் 2.0 வெர்ஷனை வெளியிட்டுள்ளார்.

ஒய்யாரமாக நடந்து

ஒய்யாரமாக நடந்து

கத்தரிப்பூ நிற புடவையில் சுழன்று சுழன்று இருக்கும் அழகிய கூந்தலுடன், சுண்டி இழுக்கும் இடுப்பு மடிப்பு மற்றும் சூடேற்றும் பின்னழகு கொண்ட தனது இடையை அங்குமிங்கும் ஆட்டியவாறு ஒய்யாரமாக நடந்து சென்று சிறிது தூரத்திற்கு பின் கிக் ஏற்றும் லுக்கில் திரும்பி பார்த்து ரசிகர்களை கிறங்க வைக்கும் இந்த வீடியோவில் ஷெரினுக்காகவே எழுதிய அழகிய அசுரா பாடலை பின்னணி கோர்ப்பில் இணைக்கப்பட்டு மேலும் அழகு சேர்த்துள்ள இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X