அன்புக்காக ஏங்கினேன்.. தந்தையை பறிகொடுத்த ஷெரினின் உருக்கமான பதிவு!
சென்னை: தந்தையின் துணை இல்லாமல், தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர் நடிகை ஷெரின். இவரது தந்தை ஒருவாரத்திற்கு முன் உயிரிழந்த நிலையில், அந்த தகவலே தனக்கு இப்போதுதான் தெரிந்தது என்றும் உங்கள் அன்பிற்காக பல நாட்கள் ஏங்கினேன் என்றும், நடிகை ஷெரின் உருக்கமான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
செல்வராகவன் இயக்கிய துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். நடிகை ஷெரின் முதல் படத்திலேயே நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்த இவர் தொடர்ந்து ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில் ஆகிய படங்களில் நடித்து தன்னுடைய ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகமாக்கினார். விசில் படத்தில் அழகிய அசுரா என்று பாடலுக்கு இவர் போட்ட ஆட்டத்தை ரசிகர்கள் யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது.

நடிகை ஷெரின்: தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில படங்களிலேயே இவர் காணாமல் போனார். படவாய்ப்பு குறைந்ததை அடுத்து, பீமா படத்தில் ரங்கு ரங்கம்மா என்ற ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடி இருந்தார். அதன்பிறகும் படவாய்ப்பு வராததால், நண்பேண்டா படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக காமெடி காட்சியில் நடித்திருந்தார்.
பிக்பாஸ் சீசன் 3: நீண்ட நாட்களுக்கு பிறகு,பிக்பாஸ் சீசன் 3ல் பங்கேற்ற ஷெரின் தன்னுடைய ரசிகர்கள் வட்டத்தை மீண்டும் தன்வசப்படுத்தினார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் போது மிகவும் குண்டாக காணப்பட்ட ஷெரின், அந்த வீட்டில் இருந்த சில மாதங்களிலேயே கடுமையான ஒர்க்அவுட் செய்து, சும்மா சிக்குனு மாறினா.அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, மீண்டும் விஜய்டிவியில் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விதவிதமாக சமைத்து அசத்தினார்.
அன்பிற்காக ஏங்கேன்: இந்நிலையில் நடிகை ஷெரின் தனது இன்ஸ்டாகிராமில் தந்தை உயிரிழந்தது குறித்து உருக்கமான பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில், நான் உங்களை மிகவும் நேசித்தேன், என் வாழ்நாள் முழுவதும் உங்கள் அன்பிற்காக ஏங்கினேன். நீங்கள் ஒரு வாரத்திற்கு முன்பு இறந்துவிட்டீர்கள், என்பது எனக்கு இன்று தான் நான் தெரிந்தது. அது என் இதயத்தை மேலும் உடைத்துவிட்டது. இந்த போட்டோ மட்டும்தான் தான் என்னிடம் உள்ளது. நான் உங்களை இழந்துவிட்டேன், rest in peace. எனக் குறிப்பிட்டு உள்ளார்.
இந்த பதிவினை பார்த்த ஷெரின் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறின வருகின்றனர். அப்பா என்ற உறவைவ தந்தை மறைவுக்கு ரசிகர்கள், திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். நடிகை ஷெரின் அப்பாவும் அம்மாவும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வந்த நிலையில்,நடிகை ஷெரின் தாயின் அரவணைப்பில் இருந்தார். அதை அவர் பல பேட்டியில் தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











