கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ... நர்ஸாக மாறிய இளம் ஹீரோயின்... வாழ்த்தி வரவேற்கும் ஃபேன்ஸ்!

By

மும்பை: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, மருத்துவமனையில் நர்சாக இணைந்துள்ளார், நடிகை ஒருவர்.

Recommended Video

வைரஸ் உங்கள் நண்பன் | V-CONNECT | FILMIBEAT TAMIL

இந்தியில் காஞ்ச்லி லைஃப் இன் எ ஸ்லாஹ் (Kaanchli Life in a Slough) என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ஷிகா மல்கோத்ரா.

இதில் சஞ்சய் மிஸ்ரா நாயகனாக நடித்திருந்தார். தெடிப்பியா ஜோஷி இயக்கி இருந்த இந்தப் படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆனது.

நர்ஸ் ஆனார்

நர்ஸ் ஆனார்

இந்நிலையில் நடிகை ஷிகா மல்கோத்ரா கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். சீனாவின் உஹானில் ஆரம்பித்த இந்த கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவிவிட்டது. இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. அமெரிக்காவிலும் கொரோனா கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

கட்டுப்படுத்தும் நடவடிக்கை

கட்டுப்படுத்தும் நடவடிக்கை

கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வைரஸ் இங்கிலாந்திலும் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. 800-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நர்சிங்கில் பட்டப்படிப்பு

நர்சிங்கில் பட்டப்படிப்பு

பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான மருத்துவச் சேவையில், தன்னார்வலர்கள் இணைந்து கொள்ளலாம் என்று அரசு சமீத்தில் அறிவித்திருந்தது. இதையடுத்து, நடிகை ஷிகா, மும்பையில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் தன்னார்வ நர்ஸாக நேற்று இணைந்துள்ளார். இவர், நர்ஸிங்கில் பட்டப்படிப்பு முடித்துள்ளார்.

சேவை செய்கிறேன்

சேவை செய்கிறேன்

நடிகையாகி விட்டதால், நர்ஸாக பணியாற்றாமல் இருந்தார். இப்போது இணைந்துள்ளார். நாடு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்த இக்கட்டான நேரத்தில் மக்களுக்கு நடிகையாகவும் நர்ஸாகவும் சேவையாற்றத் தயாராக இருக்கிறேன். உங்கள் ஆசிர்வாதம் தேவை. வீட்டிலேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள், அரசுக்கு உதவுங்கள் என்று தெரிவித்துள்ளார். இவரது அம்மாவும் நர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X