ஒரு கோடி ரூபாய் கேட்ட நடிகைக்கு 'பெப்பே' சொன்ன பிக்பாஸ்? அவ்ளோ வொர்த் இல்லையாம்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரு கோடி ரூபாய் கேட்ட பிரபல நடிகைக்கு நிகழ்ச்சி குழு வாய்ப்பு மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 4க்கான தொடக்கப் பணிகள் சூடு பிடித்துள்ளது. இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான 2 டீசர்கள் வெளியாகியுள்ளது.

சொன்னப்படி கேளு தம்பி என கொரோனா தடுப்பு வழிமுறைகள் கூடிய பாடலுடன் அசத்தலாய் இருந்தது பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடைசி டீசர்.

சாண்டி கோரியோக்ராஃப்

சாண்டி கோரியோக்ராஃப்

இந்த டீசருக்கு நடிகர் கமல்ஹாசன் க்யூட் ஸ்டெப்புகளுடன் நடனமாடினார். அவரது அந்த நடனம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த டீசருக்கு பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான டான்ஸ் மாஸ்டர் சாண்டிதான் கோரியோக்ராஃப் செய்தது தெரியவந்தது.

விரைவில் புரமோ

விரைவில் புரமோ

டீசர் வெளியான நிலையில் விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான புரமோவும் வெளியாகவுள்ளது. நிகழ்ச்சி தொடங்க உள்ள தேதியும் கடந்த சில நாட்களாய் சமூக வலைதளங்களில் கசிய தொடங்கியுள்ளது. ஆனால் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் குறித்து நாள் தோறும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதிக முக்கியத்துவம்

அதிக முக்கியத்துவம்

விஜய் டிவியை சேர்ந்தவர்கள் குறைந்தது 2 பேர் கட்டாயம் இந்த சீசனில் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாவது சீசனில் விஜய் டிவியை சேர்ந்த பாலாஜி பங்கேற்றார். மூன்றாவது சீசனில் கவின் பங்கேற்றார். அந்தவகையில் இம்முறை விஜய் டிவி பிரபலங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகைகள் மறுப்பு

நடிகைகள் மறுப்பு

அதேபோல் இளம் நடிகைகள் மற்றும் மாடல்களுக்கும் வாய்ப்பு கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகிறார்கள் என்று கூறப்பட்ட நடிகைகள் சுனைனா மற்றும் அம்ரிதா அய்யர், பங்கேற்க போவதில்லை என பொட்டில் அடித்தாற்போல் சொல்லி மறுத்துவிட்டனர்.

ஷில்பா மஞ்சுநாத்

ஷில்பா மஞ்சுநாத்

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதாக கூறிய மற்றொரு நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடிகையாக அறிமுகமான நடிகை ஷில்பா மஞ்சுநாத் பற்றிய தகவல்தான் அது.

தீயாய் பரவிய தகவல்

தீயாய் பரவிய தகவல்

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்திற்கு பிறகு ஷில்பா மஞ்சுநாத்துக்கு பெரிய பட வாய்ப்புகள் இல்லை. இருப்பினும் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இதனால் அவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இந்நிலையில் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதாக அண்மையில் தகவல் வெளியானது.

நடிகை வொர்த் இல்லை

நடிகை வொர்த் இல்லை

மேலும் இதற்காக ஒரு கோடி ரூபாய் டீலீங் பேசி நடிகை ஷில்பா மஞ்சுநாத் ஓகே செய்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், ஒரு கோடி கொடுத்து அழைத்து வரும் அளவுக்கு நடிகை வொர்த் இல்லை என நிகழ்ச்சி குழு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவசியமே இல்லை

அவசியமே இல்லை

அதற்கு பதிலாக பல இளம் மாடல்கள் மற்றும் கவனத்தை பெற்ற இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம் என யோசித்து வருகிறதாம். அதோடு உலகப் புகழ்பெற்ற பிக்பாஸ் மேடையில் எப்போது வாய்ப்பு கிடைக்கும் என பலர் காத்து கிடக்கும் நிலையில் இவ்வளவு பெரிய அமொவுண்ட் கொடுத்து பங்கேற்க வேண்டி அவசியமே இல்லை என கூறிவிட்டதாம் நிகழ்ச்சி குழு.

Recommended Video

மாஸ்டர் எப்போது ரிலீஸ்.. மற்றும் பல சுவாரசிய தகவல்கள் - வீடியோ
அடுத்தவாரம் ஃபைனல் லிஸ்ட்

அடுத்தவாரம் ஃபைனல் லிஸ்ட்

குறைந்த பட்ஜெட்டில் பங்கேற்ற ஜூலி, லாஸ்லியா, தர்ஷன், முகேன் போன்றவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி ஹிட்டுக்கு உதவியதையும் பிக்பாஸ் குழு நினைவு கூர்ந்துள்ளதாம். இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள டாப் 16 பேருக்கான தேர்வு டாப் 30 பேரில் இருந்து அடுத்த வாரம் நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X