மாலத்தீவு கடற்கரையில் பிகினியில் சுற்றும் விஜய் பட நடிகை.. திணறும் இன்ஸ்டா!
சென்னை: பிரபல நடிகை மாலத் தீவு கடற்கரையில் பிகினியில் சுற்றும் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளுல் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஷில்பா ஷெட்டி.
40 வயதை கடந்த போதும் யோகா, டயட், எக்ஸஸைஸ் என இருந்து பல இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுத்து வருகிறார்.

குஷி படத்தில்
இந்தியில் முன்னணி நடிகர்களுடன் எராளமான படங்களில் நடித்துள்ள ஷில்பா ஷெட்டி, தமிழில் விஜய்யின் குஷி படத்திலும் நடித்துள்ளார். குஷி படத்தில் மேக்கோரீனா என்ற பாடலுக்கு நடனமாடினார் ஷில்பா ஷெட்டி.

ஒய்யார நடை
இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார். இந்நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டி, தனது ஓய்வை கழிக்க மாலத் தீவு சென்றுள்ளார். மாலத் தீவு கடற்கரையில் ஷில்பா ஷெட்டி பிகினியில் ஒய்யார நடைபோட்டு விதவிதமாய் போஸ் கொடுத்துள்ளார்.
கண்களில் கூலர்ஸ்
மேலும் கையில் கேப் கண்களில் கூலர்ஸ் என்றும் கடற்கரையில் கலக்கல் நடைபோட்டுள்ளார். ஷில்பா ஷெட்டியின் இந்த வீடியோக்களையும் போட்டோக்களையும் பார்த்த நெட்டிசன்கள் பல ஆண்டுகள் ஆகியும் எந்த மாற்றமும் இல்லை, அப்படியே இருக்கிறீர்கள் என கூறி வருகின்றனர்.
கட்டியணைத்து முத்தம்
மேலும் ஒரு பக்க ஸ்லீவ் உள்ள வித்தியாசமான உடையில் வெறும் காலோடு நடந்தும் ஓடியும் கிறங்க வைத்துள்ளார். அதோடு தனது கணவரையும் கட்டியணைத்து முத்தம் கொடுத்துள்ளார் ஷில்பா ஷெட்டி. அவரது இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











