லாக்டவுன் நேரத்துல குடும்பத்திற்காக ஹெல்த்தியான பிரேக் ஃபாஸ்ட் தயார் செய்த ஷில்பா ஷெட்டி!
சென்னை: குவாரண்டைன் நேரத்தில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவு செய்து வரும் நடிகை ஷில்பா ஷெட்டி உடல் ஆரோக்கியத்திற்காக ரவாவை கொண்டு பிளாட்டர் செய்துள்ளார்.
Recommended Video
பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி பாஜிகர் படத்தின் மூலம் 1993ஆம் ஆண்டு இந்தியில் அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் என மற்ற மொழி படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் நடிகர் விஜயுடன் குஷி படத்தில் மேக்கோரினா பாடலுக்கு நடனமாடினார். இதனால் தமிழ் ரசிகர்களுக்கும் பரிட்சயம் ஆனார் ஷில்பா ஷெட்டி.
பிசினஸ், சினிமா என பிஸியாக உள்ள ஷில்பா ஷெட்டி தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் வீட்டில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்து வருகிறார். ஆரோக்கியமான உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக சில பிரபலங்களை நாம் கவனிக்க வேண்டியிருந்தால், அந்தப் பட்டியலில் ஷில்பா ஷெட்டி குந்த்ரா நிச்சயமாக இடம்பிடிப்பார்.
'ஸ்வஸ்த் ரஹோ, மாஸ்ட் ரஹோ' என்ற தாரக மந்திரத்தை உச்சரிக்கும் ஷில்பா ஷெட்டி தன்னுடைய ஃபிட்னஸ் குறித்தும் தனது டயட் குறித்தும் அவ்வப்போது யூட்யூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து வருகிறார். ஷில்பா ஷெட்டி தனது ஃபாலோயர்களுக்கு பல உணவு குறிப்புகள் மற்றும் ஆரோக்கியமான சமையல் குறிப்புகள் குறித்து அப்டேட் செய்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் தான் செய்த ஓட்ஸ் ரவா கீரை தோக்லா மற்றும் அதற்கு சைடிஷாக தேங்காய் சட்னியை பிரேக் ஃபாஸ்ட்டாக செய்திருக்கிறார். அதில் அக்ரூட் பருப்புகள், ஊறவைத்த மற்றும் உரிக்கப்பட்ட பாதாம் மற்றும் அத்திப்பழங்கள் சேர்க்கப்பட்டிருந்தது. ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் ஷேர் செய்திருக்கும் இந்த டிஷில் உள்ள அனைத்து பொருட்களுமே மிகவும் சத்துள்ளவையாக உள்ளது.
இதேபோல் கரிஷ்மா கபூர் முதல் மீரா கபூர் வரை மலாக்கா அரோரா முதல் சோனம் கபூர் வரை பல பிரபலங்கள் ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவுகளை இந்த ஊரடங்கு நேரத்தில் சமைத்து வருகின்றனர். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











