அரைகுறை ஆடையில் மர்லின் மன்றோ போஸ் கொடுத்த நடிகை.. திடீரென தூக்கியதால் பறந்த மானம்! வைரலாகும் வீடியோ
Recommended Video
மும்பை: நடிகை ஷில்பா ஷெட்டி அரைகுறை ஆடையில் மர்லின் மன்றோ போல் போஸ் கொடுத்தபோது அவரது கவுன் திடீரென காற்றின் வேகத்தில் மேலே தூக்கிக்கொண்டது.
பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி பாஜிகர் படத்தின் மூலம் 1993ஆம் ஆண்டு இந்தியில் அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் என மற்ற மொழி படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் நடிகர் விஜயுடன் குஷி படத்தில் மேக்கோரினா பாடலுக்கு நடனமாடினார். இதனால் தமிழ் ரசிகர்களுக்கும் பரிட்சயம் ஆனார் ஷில்பா ஷெட்டி.

வைரலாகும் வீடியோ
மேலும் 2008ஆம் ஆண்டு இந்தியில் நடத்தப்பட்ட பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்கேற்று மக்களின் ஆதரவை பெற்றார். இந்நிலையில் ஷில்பா ஷெட்டியின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் போட்டோ
அதாவது ஷில்பா ஷெட்டி தற்போது யூரோப்பில் தனது விடுமுறையை கழித்து வருகிறார். இது தொடர்பான பல புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மர்லின் மன்றோ போல்
அந்த வகையில் வீடியோ ஒன்றையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் ஷில்பா ஷெட்டி. அதில் பீச் ஒன்றில் பாலம் போல் உள்ள ஒரு பகுதியில் நின்று சிவப்பு நிற கவுனில் லூஸ் ஹேர் விட்டு மர்லின் மன்றோ போல் போஸ் கொடுத்தார் ஷில்பா ஷெட்டி.

தொடைக்கு மேல் தூக்கிய கவுன்
நன்றாகவே போய்க்கொண்டிருந்தது அந்த வீடியோ. ஷில்பாவும் அனுபவித்து வீடியோவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென வீசிய காற்றால் ஷில்பா ஷெட்டியின் கவுன் தொடைக்கு மேலே தூக்கிவிட்டது.

மர்லின் மன்றோ மொமென்ட்
இதனால் பதறிய ஷில்பா திடீரென போஸ் கொடுப்பதை மறந்து கீழே குனிந்து கவுன் மேலே பறப்பதை தடுத்தார். இந்த வீடியோவை மை மர்லின் மன்றோ மொமென்ட் என கேப்ஷன் கொடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
வைரலாகும் வீடியோ
இந்த வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 26 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். ஏராளமானோர் இதனை ஷேர் செய்துள்ளதால் இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











