பிளாஷ்பேக்: வைர மோதிரத்துடன் புரபோஸ் செய்த ராஜ் குந்த்ரா.. கொஞ்சம் கூட இம்ப்ரஸ் ஆகாத ஷில்பா ஷெட்டி!

சென்னை: ஆபாச பட வழக்கில் ராஜ் குந்த்ரா கைதாகியுள்ள நிலையில் ஷில்பா ஷெட்டியிடம் அவர் காதலை புரபோஸ் பண்ணிய தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூரை பூர்விகமாக கொண்டவர் ஷில்பா ஷெட்டி. மாடல், தயாரிப்பாளர், நடிகை, எழுத்தாளர் தொழில் அதிபர் என பல முகங்களை கொண்டுள்ளார்.

பள்ளி நாட்களிலேயே பரதநாட்டியம் கற்ற ஷில்பா ஷெட்டி, வாலி பால் டீம்மின் கேப்டனாகவும் இருந்துள்ளார்.

பாஸிகர் படத்தின் மூலம் அறிமுகம்

பாஸிகர் படத்தின் மூலம் அறிமுகம்

கல்லூரி நாட்களிலேயே லிம்கா நிறுவனத்துடன் இணைந்து பல விளம்பர படங்களில் நடித்துள்ளார் நடிகை ஷில்பா ஷெட்டி. பாஸிகர் என்ற இந்தி படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு அறிமுகமானார் ஷில்பா ஷெட்டி.

பிலிம் ஃபேர் விருது

பிலிம் ஃபேர் விருது

முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான பிலிம் ஃபேர் விருதுகளுக்கு நாமினேட் செய்யப்பட்டார். தொடர்ந்து ஆக், மெய்ன் கில்லாடி து அனாரி, தி கம்பீர், ஹத்காடி, பர்தேசி பாபு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

விஜய்யின் குஷி படத்தில்

விஜய்யின் குஷி படத்தில்

தமிழில் மிஸ்டர் ரோமியோ படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக நடித்தார். அதன்பிறகு 4 ஆண்டுகள் கழித்து விஜய்யின் குஷி படத்தில் கேமியோ அப்பியரன்ஸ் கொடுத்தார்.

ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு

ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு

குஷி படத்தில் மேக்கோரினா பாடலுக்கு நடனமாடினார். சில நிமடங்களே படத்தில் இடம்பெற்றிருந்த போதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் நடிகை ஷில்பா ஷெட்டி.

பல மொழி படங்கள்

பல மொழி படங்கள்

அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்காத போதும் தமிழ் சினிமாவில் அவருக்கு என பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. தொடர்ந்து இந்தி, கன்னடம் தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

நிக்கம்மா பட போஸ்ட் புரடெக்ஷன்

நிக்கம்மா பட போஸ்ட் புரடெக்ஷன்

கடைசியாக அவரது நடிப்பில் ஹங்காமா 2 படம் வெளியானது. டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் இந்த படம் வெளியானது. தற்போது நிக்கம்மா என்ற படத்தில் நடித்து வருகிறார் ஷில்பா ஷெட்டி. இதன் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

அக்ஷய் குமாருடன் டேட்டிங்

அக்ஷய் குமாருடன் டேட்டிங்

நடிகை ஷில்பா ஷெட்டி 1994ஆம் ஆண்டு மெய்ன் கில்லாடி து அனாரி படத்தில் நடித்த போது அக்ஷய் குமாருடன் காதல் உறவில் இருந்தார். இருவரும் டேட்டிங்கில் இருந்தனர். ஆனால் ஷில்பா ஷெட்டி திருமணத்திற்கு பிறகு நடிக்கக்கூடாது என்றார் அக்ஷய் குமார்.

அக்ஷய்யுடன் காதல் முறிவு

அக்ஷய்யுடன் காதல் முறிவு

அதற்கு மறுப்பு தெரிவித்த ஷில்பா ஷெட்டி திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை என்று கூறினார். இதனால் அவர்களின் காதல் முறிந்தது. தொடர்ந்து தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவுடன் ஷில்பா ஷெட்டிக்கு காதல் மலர்ந்தது.

குடும்பத்தை உடைப்பவர் ஷில்பா

குடும்பத்தை உடைப்பவர் ஷில்பா

ஆனால் ராஜ் குந்த்ரா ஏற்கனவே திருமணம் ஆனவர். இதானல் அவர்களின் காதல் பெரும் சர்ச்சைக்குள்ளானது. ஷில்பா ஷெட்டி குடும்பத்தை உடைப்பவர் என ராஜ் குந்த்ராவின் முதல் மனைவி கவிதா கடுமையாக சாடினார்.

எப்படி புரபோஸ் செய்தார்?

எப்படி புரபோஸ் செய்தார்?

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவை எங்கே எப்படி சந்தித்தார், தங்களுக்குள் காதல் மலர்ந்தது எப்படி, ராஜ் குந்த்ரா எப்படி புரபோஸ் செய்தார் என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

விமானம் மூலம் பாரிஸ் வந்தார்

விமானம் மூலம் பாரிஸ் வந்தார்

அதாவது, தான் பாரிஸ் கார்ல் லாகர்பெல்டு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த போது ராஜ் குந்த்ரா விமானம் பிடித்து அங்கு பறந்து வந்ததாகவும், கிராண்டில் உள்ள ஹாலை புக் செய்ததாகவும் கூறினார். மேலும் வயலனிஸ்ட்கள் வாசிக்க என்னை அழைத்து சென்றார்.

நல்லா டிரெஸ் பண்ணிக்கோ

நல்லா டிரெஸ் பண்ணிக்கோ

மேலும் ஃபிரண்ட் வீட்டுக்கு செல்கிறோம், அங்குதான் லஞ்ச் சாப்பிட போகிறோம். ஆகையால் நல்லா டிரெஸ் பண்ணிக்கோ என்றார். என் சகோதரிக்கு ஏற்கனவே அவரின் திட்டம் தெரிந்துள்ளது. அதனால் அவர் என்னை ரெட் கலர் உடையை உடுத்த சொன்னார்.

வைர மோதிரம் பரிசு

வைர மோதிரம் பரிசு

ராஜ், ஒரு சிறப்பான இடத்திற்கு அழைத்து செல்ல போவதாக கூறினார். மும்பையிலேயே என் பெற்றோரிடம் அதற்கு அனுமதி வாங்கிவிட்டார். பின்னர் எனக்கு வைர மோதிரத்தை பரிசளித்து தனது காதலை சொல்லிவிட்டார்.

வெறும் 5 காரட் தான்

வெறும் 5 காரட் தான்

வைர மோதிரம் கொடுக்கிறாரே காஸ்ட்லியாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அது வெறும் 5 காரட்தான். நான் இதெல்லாம் கற்பனையா என்று நினைத்தேன். ஆனால் அவர் திருமண மோதிரம் பெரிதாக இருக்கும் என்று கூறினார்.

கடைசி வரை வரும் நபர்

கடைசி வரை வரும் நபர்

பிறகு நான் எஸ் சொல்லிவிட்டேன். எனக்கு ஈஃபில் டவர் ரொம்ப பிடிக்கும் என்பது அவருக்கு தெரியும். பாரிஸில் பலமுறை ஷுட்டிங் சென்றுள்ளேன். ஆனால் வாழ்க்கையில் கடைசி வரை வரும் நபருடன் தான் மேலே செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன் என கூறியுள்ளார்.

கைதாகியுள்ள ராஜ் குந்த்ரா

கைதாகியுள்ள ராஜ் குந்த்ரா

ஷில்பா ஷெட்டி - ராஜ் குந்த்ரா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஆபாச படம் தயாரித்து வெளியிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு போலீசார் 14 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மனம் உடைந்து போன ஷில்பா

மனம் உடைந்து போன ஷில்பா

தனது கணவரின் இந்த செயலால் மிகவும் மனமுடைந்து போயுள்ளார் நடிகை ஷில்பா ஷெட்டி. ராஜ் குந்த்ராவிடம் நடத்தப்படும் விசாரணையில் நாள்தோறும் ஒரு திடுக் தகவல் வெளியாகி வருகிறது. நடிகைகள் பலரும் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X