கார்த்திகை தீபத்தை விளக்குகளுடன் கொண்டாடிய ஷிவானி.. என்ன ஜொலி ஜொலிக்கறாங்க!

சென்னை : நடிகை ஷிவானி நாராயணன் சீரியலில் இருந்து திரைத்துறைக்கு என்ட்ரி கொடுத்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், அதன்மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் ஷிவானி, ஏராளமான பாலோயர்களை பெற்றுள்ளார்.

நடிகை ஷிவானி நாராயணன்

நடிகை ஷிவானி நாராயணன்

நடிகை ஷிவானி நாராயணன் சீரியல்கள் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர். தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியும் இவரை வேறு லெவலில் ரசிகர்களிடம் ரீச் செய்ய வைத்தது. இந்த நிகழ்ச்சி மூலம் இவர் அதிகமான பட வாய்ப்புகளை பெற்று வருகிறார். விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான டிஎஸ்பி படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடித்து கவனம் பெற்றுள்ளார். இந்த ஆண்டில் இவரது நடிப்பில் இதுவரை 3 படங்கள் ரிலீசான நிலையில், சில தினங்களில் வடிவேலுவுடன் இவர் நடித்துள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படமும் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின்மூலம் வடிவேலு 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்த ஆண்டில் 4 படங்கள்

இந்த ஆண்டில் 4 படங்கள்

இதையடுத்து இந்த ஆண்டில் இவர் நடிப்பில் 4 படங்கள் வெளியாகவுள்ளன. சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் ஷிவானி அடுத்தடுத்த கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரை இன்ஸ்டாகிராமில் 34 மில்லியன் பாலோயர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இவர் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு அதிகமான லைக்ஸ்களும் கிடைத்து வருகின்றன.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்

கவர்ச்சிப் புகைப்படங்கள் மட்டுமின்றி அவ்வப்போது கோயில்களுக்கு விசிட் செய்து அந்தப் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார் ஷிவானி. அந்த வகையில் நேற்றைய தினம் கார்த்திகை தீபத்தையொட்டி திருக்கார்த்திகை விளக்குகளுடன் இவர் பதிவிட்டுள்ள புகைப்படங்களில் அழகு அள்ளுகிறது. தான் மாடர்ன் டிரஸ்ஸில் மட்டுமில்லாமல் ஹோம்லி லுக்கிலும் பெஸ்ட் தான் என்பதை இந்தப் புகைப்படங்கள் மூலம் சொல்லாமல் சொல்கிறார் ஷிவானி.

கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாட்டம்

கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாட்டம்

பூக்களுக்கு இடையில் வைக்கப்பட்ட விளக்குகளுடன் இவரும் ஜொலிக்கிறார். கார்த்திகை தீப வாழ்த்துக்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ள ஷிவானி, தான் அணிந்துள்ள புடவை தன்னுடைய அம்மாவின் திருமண புடவை என்ற தகவலையும் பகிர்ந்துள்ளார். அந்தப் புடவைக்கு எடுப்பாக ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டும் அழகான அணிகலன்களும் அணிந்து மேலும் ஜொலிப்பை கூட்டியுள்ளார் ஷிவானி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X