காப்பி அடித்து மாட்டிக்கொண்ட ஷிவானி.. வெச்சு செய்யும் நெட்டிசன்கள் !

சென்னை : ரெட்டை ரோஜா, பகல் நிலவு உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் இல்லத்தரசிகளிடம் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஷிவானி நாராயணன்.

சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமான ஷிவானி இப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அதை விட பலமடங்கு பிரபலமாகி வருகிறார்.

தினம் தினம் கவர்ச்சி புகைப்படங்களையும் கவர்ச்சி நடனமாடியவாறு இருக்கும் வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களை உசுப்பேத்தி வரும் இவர் இப்பொழுது அதே பாணியில் கண்கள் கூசும் வகையில் ஜிகுஜிகுவென இருக்கும் சார்ட் டிரஸை அணிந்துகொண்டு வெளியிட்டுள்ள புகைப்படத்தின் பதிவு, பிரியங்கா சோப்ராவை காப்பியடித்து என இப்பொழுது நெட்டிசன்களால் பங்கமாக கலாய்க்கப்பட்டு வருகிறது.

நெடுந்தொடர்களில்

நெடுந்தொடர்களில்

தினமும் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் ரத்தத்தை கொதிக்கவிட்டு வரும் நடிகை ஷிவானி நாராயணன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு மற்றும் ரெட்டை ரோஜா உள்ளிட்ட நெடுந்தொடர்களில் நடித்ததன் மூலம் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானார்.

விதவிதமான யுத்திகளை

விதவிதமான யுத்திகளை

சீரியல்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து குடும்பப் பெண்களை கவர்ந்து வந்த ஷிவானி இப்பொழுது இளசுகளை கவர விதவிதமான யுத்திகளைப் பயன்படுத்தி வருகிறார், அதில் ஒன்று கவர்ச்சி. முன்னணி ஹீரோயின்களே கவர்ச்சி காட்ட தயங்கும் அளவிற்கு அதிக கவர்ச்சி காட்டி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு இணையதளத்தில் மிகப்பெரிய பேசும் பொருளாக உள்ளார்.

ஜிகுஜிகு உடையில்

ஜிகுஜிகு உடையில்

இவ்வாறு தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களையும், கவர்ச்சி அலை வீச பல்வேறு நடன வீடியோக்களையும் வெளியிட்டு இளசுகளை சூடேற்றி வரும் ஷிவானி இப்பொழுது அதே பாணியில் கவர்ச்சி ததும்ப ததும்ப ஜிகுஜிகு உடையில் செம ஹாட்டாக கூந்தலை கலரிங் செய்து கொண்டு வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இப்பொழுது ரசிகர்களால் ஒருபுறம் மிகவும் வர்ணிக்கப்பட்டு வைரலாகி வந்தாலும் மறுபுறம் பங்கமாக கலாய்க்கப்பட்டு வருகிறது.

பிரியங்கா சோப்ராவை காப்பியடித்து

பிரியங்கா சோப்ராவை காப்பியடித்து

சில நாட்களுக்கு முன்பு பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூந்தலில் கலரிங் செய்து பதிவிட்ட பதிவில் " நியூ ஹேர் டோன்ட் கேர்" என தலைப்பிட்டு இருந்த நிலையில் இப்பொழுது ஷிவானியும் அதேபோன்று கூந்தலை கலரிங் செய்து கொண்டு கவர்ச்சி உடையில் உள்ளவாறு வெளியிட்டுள்ள புகைப்படத்தில் "ரெட் ஹேர் டோன்ட் கேர்" என தலைப்பிட்டு உள்ளதை பார்த்த ரசிகர்கள் பலரும் பிரியங்கா சோப்ராவை காப்பியடித்து போஸ்ட் போட வேண்டுமா, என்றவாறு பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

Recommended Video

Bigg Boss 4 Tamil Host? 2020 contestant List
கவர்ச்சியை அள்ளிக் கொட்டி

கவர்ச்சியை அள்ளிக் கொட்டி

இவ்வாறு ஒருபுறம் சிலர் கலாய்த்து வந்தாலும் ஷிவானியின் கவர்ச்சி புகைப்படங்களை பார்க்க நாளுக்கு நாள் ரசிகர் கூட்டம் அதிகமாகிக் கொண்டே போகும் நிலையில், தன்னை ட்ரோல் செய்யும் நெட்டிசன்களை பற்றியெல்லாம் கவலைப்பட நேரம் இல்லாமல் தொடர்ந்து எந்த அளவிற்கு கவர்ச்சி காட்ட முடியுமோ அந்த அளவுக்கு கவர்ச்சியை அள்ளிக் கொட்டி வருகிறார் நம்ம ஷிவானி செல்லம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X