Shivani :சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததற்கு காரணம்.. ஷிவானி நாராயணன் மழுப்பல்!

சென்னை : நடிகை ஷிவானி நாராயணன் டிவியிலிருந்து சினிமாவில் நடிக்க வந்தவர்களில் ஒருவர். சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மனைவிகளில் ஒருவராக இவர் நடித்திருந்தார்.

முன்னதாக சின்னத்திரை சீரியல்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்தார் ஷிவானி.

தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பும் சீரியல்கள் மூலம் ஷிவானிக்கு கிடைத்தது. அதையும் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார்.

Actress Shivani narayanan opens up about her cinema chances

காதல் குறித்து ஷிவானி நாராயணன் : நடிகை ஷிவானி நாராயணன் பகல் நிலவு, இரட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றவர். இந்த சீரியல்களில் இவருக்கு நடிக்கவும் அதிகமான வாய்ப்புகள் கிடைத்தன. முன்னதாக மாடலிங், விளம்பரப் படங்களில் நடித்ததன்மூலம் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் ஷிவானிக்கு வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து ஜோடி ஃபன் அன்லிமிட்டட் என்ற நடன நிகழ்ச்சியிலும் முகமது அசீமுடன் ஜோடியா ஷிவானி பங்கேற்றார்.

இரட்டை ரோஜா என்ற தொடரில் இரட்டை வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த ஷிவானிக்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சி இவரை பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாக்கியது. இவரது குறும்புத்தனம் மற்றும் சேட்டை அந்த நிகழ்ச்சியை வெகுவாக களைகட்ட வைத்தது. இந்த நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் மூலம் சினிமாவிலும் ஷிவானிக்கு வாய்ப்புகள் தேடி வந்தன.

Actress Shivani narayanan opens up about her cinema chances

சமீபத்தில் வெளியான விக்ரம், நாய் சேகர் போன்ற படங்களில் நடித்திருந்தார் ஷிவானி. விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் 3 மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார். ஆனாலும் இவருக்கு தனிப்பட்ட முறையில், துப்பாக்கி சுடும்படியான காட்சிகளும் அமைந்த நிலையில், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார். இதேபோல நாய் சேகர் படத்திலும் ஸ்விம்மிங் சூட்டிங் நடித்து அதிரடி கிளப்பியுள்ளார். பம்பர் படத்தில் ஹீரோயினாகவே நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களிலும் மிகவும் பிசியாக காணப்படுகிறார் ஷிவானி. தொடர்ந்து அடுத்தடுத்த கவர்ச்சி தூக்கலான புகைப்பட சூட்களை எடுத்து அதன் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். இந்நிலையில் தனது சமீபத்திய பேட்டியில் சினிமா வாய்ப்புகள் குறித்து பேசியுள்ளார் ஷிவானி. சின்னத்திரையில் தனக்கு எளிதாக வாய்ப்புகள் கிடைத்துவிட்டதாகவும் ஆனால் சினிமாவில் அவ்வளவு எளிதாக தன்னை நிரூபிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்றும் ஷிவானி தெரிவித்துள்ளார்.

Actress Shivani narayanan opens up about her cinema chances

சினிமாவில் தனக்கு எந்தவிதமான பேக்கிரவுண்டும் இல்லாததும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் ஷிவானி தெரிவித்துள்ளார். பிக்பாஸ் காதலை குறிப்பிடும்வகையில், காதல்தான் சினிமா கேரியரில் பாதிப்பை ஏற்படுத்தியதா என்று கேட்டப்பட்ட நிலையில், ஆமாம் என்று பதிலளித்த ஷிவானி, சினிமா மீதான காதல்தான் தன்னுடைய கேரியரை துவக்கி வைத்ததாக மழுப்பலாக பதில் தெரிவித்துள்ளார் ஷிவானி. ஷிவானி மற்றும் பாலாஜி இருவரும் காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில் அது ஃபேக் லவ் என்று விமர்சிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X