கமல் கூட நடிச்சப்போ யாருக்குமே தெரியாது... ரஜினிக்கு ஜோடியானதும் தான் எல்லாமே... ஷோபனா ஓபன்
சென்னை: பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கடந்த மாதம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அவருடன் நடிகைகள் ஷோபனா, குஷ்பூ, ரேவதி ஆகியோரும் பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்றனர்.
அப்போது கமல்ஹாசனுடன் நடித்த போது தன்னை யாருக்கும் தெரியாது என அவர் முன்பே ஷோபனா கூறியது தற்போது வைரலாகி வருகிறது.

கமல் முன்பே கெத்து காட்டிய ஷோபனா:ம மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வரும் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக இந்தப் படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் வெளியீட்டு விழா கடந்த மாதம் 29ம் தேதி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன், நடிகைகள் குஷ்பூ, ரேவதி, ஷோபனா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியும் கலந்துகொண்டார். இந்நிலையில், கடந்த மாதம் நடைபெற்ற பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், நடிகை ஷோபனா பேசியிருந்தார். 1990களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஷோபனா, மிகச் சிறந்த கிளாசிக் டான்ஸராகவும் பிரபலமானவர்.
தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள ஷோபனா, முதன் முதலாக நாயகியாக அறிமுகமானது எனக்குள் ஒருவன் படத்தில் தான். எஸ்பி முத்துராமன் இயக்கிய இந்தப் படத்தில் கமல் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஸ்ரீப்ரியா, ஷோபனா இருவரும் நடித்திருந்தனர். இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 மேடையில் பேசிய ஷோபனா, எனக்குள் ஒருவன் படத்தில் நடித்தது பற்றியும் குறிப்பிட்டார்.
அதாவது, தமிழ்நாட்டில் இப்பகூட என்னை யாருக்குமே பெருசா தெரியாது. ஆனால், எல்லாரும் சொல்றதெல்லாமே, தளபதி படத்தில் தலைவர் ரஜினியுடன் நடிச்ச ஷோபனா தானே என கேட்கின்றனர். அதேநேரம் கமலுடன் எனக்குள் ஒருவன் படத்திலேயே தான் அறிமுகமாகிவிட்டது யாருக்கும் தெரியவில்லை என்பதாக கூறியிருந்தார்.
ரஜினி - ஷோபனா நடித்த தளபதி திரைப்படம் மணிரத்னம் இயக்கியது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், கமல் முன்பே அவருடன் நடித்தபோது தனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என ஷோபனா பேசியதை, ரஜினி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். நடிகை ஷோபனா இந்த சம்பவத்தை மேடையில் பேசுவதை கேட்ட கமல், மணிரத்னம் ஆகியோர் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.

பொன்னியின் செல்வன் 2 வெளியாக இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில், தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சிவா, தளபதி, கோச்சடையான் ஆகிய படங்களில் ஷோபனா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சிவா படத்தில் ரஜினியுடன் நடித்த ரகளையான அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்திருந்தார் ஷோபனா.
அதில், ரஜினியுடன் சிவா படத்தில் நடித்த போது, இரு விழியின் வழியே எனத் தொடங்கும் பாடலில் ஏற்பட்ட அனுபவத்தை ஷேர் செய்திருந்தார். அதாவது அந்தப் பாடலுக்காக அணிந்திருந்த வெள்ளை நிற சேலை ரொம்ப ட்ரான்ஸ்பரண்ட்டாக இருந்ததால், ஏவிஎம் ஸ்டுடியோவில் இருந்த பிளாஸ்டிக் டேபிள் கிளாத்தை கட்டிக்கொண்டதாகக் கூறினார். மேலும், மழையில் எடுக்கப்பட்ட ஒரு காட்சியில், இருவரும் கட்டிப்பிடித்தபோது, ரஜினி அதனை கண்டுபிடித்து ரியாக்ட் செய்ததை ஃபன்னியாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











