தனியாக வாழும் சூப்பர் ஸ்டார் காதலி.. அவருக்கு பக்கபலமாக இருப்பது யார் தெரியுமா?

சென்னை: தென் இந்தியா சினிமாவில் 80 மற்றும் 90களில் பெரும் கவனத்தை ஈர்த்த நடிகைகள் பெயரைப் பட்டியலிட்டால் அதில் நடிகை ஷோபனாவின் பெயர் கட்டாயம் இருக்கும். கமல்ஹாசன் நடிப்பில் 1984ஆம் ஆண்டு வெளியான எனக்குள் ஒருவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பாக்கியாராஜின் இது நம்மாளு படத்தில் நடித்தது ஷோபனாவை பாமர மக்களிடமும் கொண்டு சென்றது. நடிகையாவதற்கு முன்னரே நடனக் கலையில் கைதேர்ந்வரான ஷோபனா இந்தியா மட்டும் இல்லாமல், வெளிநாடுகளிலும் நடனக் கச்சேரிகளை நடத்தி, உலகெங்கும் புகழ் பெற்றவரானார்.

இவர் தமிழ் திரையுலகில் விஜயகாந்த், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், கார்த்திக் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவரது நடிப்பிற்கு பல படங்கள் பாராட்டைப் பெற்றுக் கொடுத்தாலும் ஒரு சிலபடங்களை அவரது சினிமா வாழ்க்கையில் மைல் கல் எனக் கூறலாம். அதில் பெரும்பாலான ரசிகர்களைக் கவர்ந்தது மட்டும் இல்லாமல், இணையம் வேகமாக வளர்ந்த பின்னர் பொதுமக்களை இணையவாசிகளாக மாற்றியுள்ள இந்த காலத்திலும், தளபதி படத்தின் காட்சிகள் ரீல்ஸ்களாக, ஷாட்ஸ்களாக உலா வருவதைப் பார்க்க முடிகின்றது.

Shobana Kalki 2898 A D Kamal Haasan Prabhas Thalapathy Movie Rajinikanth 2898

தளபதி: 1991ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தளபதி படத்தில் சூப்பர் ஸ்டாரின் காதலியாக நடித்திருந்தார் எனக் கூறுவதை விடவும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு தனது கண்களாலும் முக பாவணைகளாலும் உயிரூட்டி இருப்பார் என்றே கூறவேண்டும். இதனால்தான் 25 ஆண்டுகளைக் எட்டிய நிலையிலும் ஷோபனா நடித்த காட்சிகள் இணையத்தில் உலா வரக் காரணம்.

சினிமாவில் இருந்து விலகிய ஷோபனா: ஒரு கட்டத்திற்கு மேல் சினிமாவில் இருந்து வெளியேறி முழுக்க முழுக்க நடனக் கலையின் மீது ஆர்வம் காட்டத்தொடங்கிய ஷோபனா, தான் தொடங்கியுள்ள கலார்ப்பனா நடனப் பள்ளியில் நடனம் சொல்லிக் கொடுப்பது, தனது பள்ளி மூலம் உலகெங்கும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்துவதில் கவனத்தைச் செலுத்தி வருகின்றார். இப்படியான நிலையில், நடிகை ஷோபனா மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஒரு படத்தில் நடித்துள்ளார். அது பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள, இந்திய சினிமாவிலேயே அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள கல்கி 2898 ஏ.டி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனால் நடிகை ஷோபனா குறித்த பேச்சுகள் இணையத்தில் அதிகமாகியுள்ளது.

Shobana Kalki 2898 A D Kamal Haasan Prabhas Thalapathy Movie Rajinikanth 2898

ஷோபனாவின் பக்கபலம்: சினிமாவில் ஷோபனா இருந்தபோதே, பல முன்னணி நடிகர்களுடன் காதலில் உள்ளார் என கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் அவையெல்லாம் உண்மையா அல்லது கைகூடவில்லையா என்பது இப்போதுவரை வெளி உலகத்திற்குத் தெரியவில்லை. 50 வயதை எட்டியுள்ள ஷோபனா, திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகின்றார். மேலும், அனந்த நாராயணி என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகின்றார். இவருக்கு தற்போது பக்கபலமாக இருப்பது, இவரது குழந்தையும் நடனப் பள்ளியுமே. முன்னணி கதாநாயகர்களுடன் காதலில் இருந்ததாக பேசப்படும் அளவிற்கு உச்சத்தில் இருந்த ஷோபனா, திடீரென படங்களில் இருந்து விலகியதும் தற்போது கல்கி 2898 ஏடி படத்தில் நடிக்க வந்துள்ளதும் பேசுபொருளாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X