அடக்கடவுளே.. வீட்டுக்குள்ளே புகுந்து பிரபல நடிகையின் காஸ்ட்லி செல்போனை திருடியிருக்காங்களே!
சென்னை: தனது விலையுயர்ந்த செல்போன் திருடு போயுள்ளதாக காவல் நிலையத்தில் பிரபல நடிகை ஷோபனா அளித்துள்ள புகார் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
பரத நாட்டியத்தில் பெரும் புகழை பெற்றவர் நடிகை ஷோபனா. இது நம்ம ஆளு, தளபதி, என்கிட்ட மோதாதே என ஏகப்பட்ட தமிழ்ப் படங்களில் நடித்து அசத்திய ஷோபனா மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
கேரளாவிலும் சென்னையிலும் நடிகை ஷோபனாவுக்கு வீடு இருக்கிறது.

நாட்டியப் பரம்பரை
நடிகை ஷோபனா பரத நாட்டியத்தில் மிகப் பெரிய புகழை அடைந்துள்ளார். பல வெளிநாடுகளுக்கு சென்று இந்தியாவின் பாரம்பரிய நடனக் கலையான பரதத்தின் புகழை பரப்பி உள்ளார். நாட்டிய சகோதரிகளான லலிதா, பத்மினி, ராகினியின் உறவுக்காரப் பெண் தான் ஷோபனா. அவர்களை போலவே இவரும் நடனத்தில் சிறந்து விளங்கி வருகிறார்.

பாக்கியராஜ் படம்
நடிகை ஷோபனா என்றதும் இன்றைக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சட்டென நினைவுக்கு வருவது பாக்கியராஜின் இது நம்ம ஆளு திரைப்படம் தான். அய்யர் ஆத்து மாமியாக அந்த படத்தில் வேற லெவலில் நடித்து அசத்தி இருப்பார் நடிகை ஷோபனா.

ரஜினிகாந்த் உடன்
முன்னணி நடிகர்களான கமல், விஜயகாந்த், சத்தியராஜ் என ஏகப்பட்ட நடிகர்களுடன் நடித்துள்ள ஷோபனா சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சிவா மற்றும் நட்புக்கே இலக்கணமான தளபதி உள்ளிட்ட படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்து கலக்கினார். சந்திரமுகி படத்தின் மலையாள வெர்ஷனான மணிச்சித்திரத்தாழு படத்திற்காக தேசிய விருதையே தட்டிச் சென்றார்.

தேசிய விருதுகள்
கேரளாவில் பிறந்து வளர்ந்த நடிகை ஷோபனா ஏகப்பட்ட மலையாள திரைப்படங்களிலும், தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும், ஆங்கிலத்தில் வெளியான Mitr My Friend என்கிற படத்திற்காகவும் தேசிய விருதை பெற்றார்.

ஏகப்பட்ட விருதுகள்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் நடித்துள்ள நடிகை ஷோபனாவிற்கு ஏகப்பட்ட உயரிய விருதுகள் கிடைத்துள்ளன. பத்மஸ்ரீ, கலைமாமணி, கலாரத்னா, டாக்டர் பட்டம் என அவரது நடிப்புத் திறமைக்கும் நடன திறமைக்கும் பல விருதுகள் குவிந்துள்ளன.

துல்கர் சல்மான் படத்தில்
தமிழ் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட நடிகை ஷோபனா கடைசியாக 2020ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான துல்கர் சல்மானின் வாரனே அவஷ்யமுண்ட் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

செல்போன் திருட்டு
இந்நிலையில், நடிகை ஷோபனா தனது விலையுயர்ந்த செல்போன் திருடு போயுள்ளதாக சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை கிளப்பி இருக்கிறது. தனது வீட்டை சுத்தம் செய்து கொண்டிருக்கையில் தனது செல்போன் மாயமானதை அறிந்து இந்த புகாரை அவர் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

வேளச்சேரியில் வீடு
சென்னை வேளச்சேரி மெயின் ரோட்டில் உள்ள குல்மகர் அவென்யூவில் நடிகை ஷோபனாவின் வீடு இருக்கிறது. தனது வீட்டுக்குள்ளே புகுந்து மர்ம நபர் யாரோ செல்போனை திருடிச் சென்றுள்ளதாக வேளச்சேரி காவல் நிலையத்தில் நடிகை ஷோபனா அளித்த புகாரை பதிவு செய்துள்ள போலீசார் அது தொடர்பாக தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











