ரஜினி அந்த காட்சியில் நடிக்க தயங்கினார்.. மனம் திறந்த ஷோபனா!

சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என் காலை பிடிக்க தயங்கிய அந்தக் காட்சியையே வேணாம்னு சொன்னாரு என ஷோபனா திரைப்படங்களில் ரஜினிகாந்துடன் பணியாற்றிய அனுபவம் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

Recommended Video

Seeman Warns Dulquer Salman | Varane Avashyamund | Prabhakaran

1990களில் முன்னணி நடிகையாக தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை அந்தஸ்து பெற்ற நடிகை ஷோபனா.

தனது நடிப்பின் மூலம் இன்று வரை பல்வேறு கதாபாத்திரங்களில் நம் அனைவரையும் ரசிக்க வைத்து வரும் சோபனா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் பணியாற்றிய பல மறக்கமுடியாத நிகழ்வுகளை சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

பல கோடி ரசிகர்கள்

பல கோடி ரசிகர்கள்

பரதநாட்டியத்தில் மிகச் சிறந்த கலைஞராக இன்று வரை விளங்கி வரும் நடிகர் ஷோபனா, தனது அசாத்தியமான நடிப்பின் மூலம், மயக்கும் கண்களைக் கொண்டு பல கோடி ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ள ஷோபனா தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

தேசிய விருது

தேசிய விருது

இவர் தமிழில் நடித்த இது நம்ம ஆளு, தளபதி, பாட்டுக்கு ஒரு தலைவன், சிவா, மல்லுவேட்டி மைனர், போடா போடி உள்ளிட்ட பல திரைப்படங்கள் இன்றுவரை பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. மேலும் நடிகை ரேவதி இயக்கிய "மிதிர் மை பிரண்ட்" என்ற ஆங்கில திரைப்படத்தில் இவர் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார்.

இன்றளவும் ரசிகர்களிடையே

இன்றளவும் ரசிகர்களிடையே

இவ்வாறு பல மொழிகளில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்து, பல்வேறு விதமான விருதுகளையும் பாராட்டுகளையும் வென்று வந்துள்ள ஷோபனா நடித்த திரைப்படங்களில் "தளபதி" இன்றளவும் ரசிகர்களிடையே சிறப்பு அந்தஸ்தை பெற்றுள்ளது. சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் பல்வேறு கேள்விகள் இவரிடம் கேட்கப்பட்ட நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்த அனுபவத்தை பற்றி கேட்டதற்கு பலரும் அறியாத சுவாரசியமான தகவல்களை பகிர்ந்தார்.

படப்பிடிப்பிலேயே அழுதாராம்

படப்பிடிப்பிலேயே அழுதாராம்

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பெரிய நடிகர் பட்டாளங்களின் நடிப்பில் உருவான தளபதி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் காதலியாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஷோபனாவை, கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக தொடர் படப்பிடிப்பு காரணமாக வீட்டிற்கு மணிரத்தினம் அனுப்பவில்லை என்பதால் படப்பிடிப்பு தளத்திலேயே அழுதேன்.

மம்முட்டி சமாதானப்படுத்தினார்.

மம்முட்டி சமாதானப்படுத்தினார்.

அப்பொழுது ஷோபனாவுக்கு வெறும் 20 வயது மட்டுமே நிறைவடைந்த நிலையில் பெற்றோர்களைப் பார்க்கவேண்டும் என ஏக்கத்துடன் இருந்த ஷோபனாவிற்கு நடிகர் மம்முட்டி ஆதரவாகப் பேசி சமாதானப்படுத்தி உள்ளார்.

ரஜினிகாந்த் காலை பிடிக்க தயங்கி

ரஜினிகாந்த் காலை பிடிக்க தயங்கி

மேலும் பேசிய அவர், ரஜினியுடன் மீண்டும் இணைந்து "சிவா" படத்திலும் ஷோபனா நடித்திருந்த நிலையில், இந்த படத்தில் ஒரு காட்சியில் ரஜினிகாந்த் ஷோபனாவை பார்க்க வீட்டின் மேற்கூரையை திறந்துகொண்டு உள்ளே படுத்திருக்கும் ஷோபனாவின் கால்களை பிடிப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருந்தாகவும், ஆனால் ரஜினிகாந்த் அந்த காலை பிடிக்கும் காட்சியில் நடிக்க தயங்கியதால் அந்தக்காட்சியே வேண்டாம் என்று சொன்னார்.

ரஜினிகாந்த் பிடிவாதமாக இருந்தார்

ரஜினிகாந்த் பிடிவாதமாக இருந்தார்

மேலும் அவ்வாறு காலை பிடிக்கும் காட்சியில் நடித்தால் என்னுடைய ரசிகர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என பிடிவாதமாக ரஜினிகாந்த் இருந்ததாகவும், பின்னர் ஒரு வழியாக ரஜினிகாந்தை சமாதானப்படுத்தி அந்த காட்சியில் கால்களை பிடிப்பது போன்று படமாக்கப்பட்டதாகவும் கூறினார்.

அவளோட கால பிடிக்கலாமா

அவளோட கால பிடிக்கலாமா

சிவா படம் வெளியான பின்பு ரஜினிகாந்த் சொன்னதைப் போலவே அவரது ரசிகர்கள் சோபனாவின் காலை பிடிக்கும் அந்த காட்சியை விரும்பாத ரசிகர்கள் " தலைவா நீ போய் அவளோட கால பிடிக்கலாமா " என தியேட்டரில் அந்த காட்சி வரும்போது பலரது எண்ண ஓட்டங்களை வெளிப்படையாக கூறினார்கள், என்றார். இதுவரை யாரும் அறியாத பல சுவாரசியமான தகவல்களை அந்தப் பேட்டியின் மூலம் ஷோபனா பகிர்ந்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X