»   »  மார்பளவை கேட்ட ரசிகரை கெட்ட வார்த்தையால் திட்டிய நடிகை

மார்பளவை கேட்ட ரசிகரை கெட்ட வார்த்தையால் திட்டிய நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஃபேஸ்புக்கில் தனது மார்பளவை கேட்ட ரசிகரை தெலுங்கு நடிகை ஷ்ராவ்யா ரெட்டி கெட்ட வார்த்தையால் திட்டியுள்ளார்.

ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளவர் ஷ்ராவ்யா ரெட்டி. அவர் ஃபேஸ்புக் லைவ் மூலம் கறுப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை குறித்து தனது ரசிகர்களிடம் பேசினார்.

அப்போது ரசிகர் ஒருவர் ஷ்ராவ்யாவின் மார்பளவை கேட்டு ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்டார். இதை பார்த்து கடுப்பான ஷ்ராவ்யா கூறுகையில்,

பைத்தியமா?

பைத்தியமா?

எனது மார்பளவை கேட்கும் உங்களுக்கு என்ன பைத்தியமா? நான் முக்கியமான ஒரு விஷயத்தை பற்றி பேசும்போது ஏன் என் உடம்பை பார்க்கிறீர்கள்?(ஆங்கிலத்தில் வரும் எஃப் வார்த்தையை பயன்படுத்தி திட்டினார் ஷ்ராவ்யா)

திட்டு

திட்டு

நான் மோசமான வார்த்தையை பயன்படுத்தியுள்ளேன். ஏன் என்றால் உங்களின் கமெண்ட்டை பலர் பார்த்துள்ளனர். நான் உடம்பை காட்டவில்லை. என் மார்பகத்தையோ, உடல்வாகையோ புகழுமாறு நான் கூறவில்லை. சொன்னேனா?

தகவல்

தகவல்

முக்கியமான தகவலை அளித்தால் அதை மட்டும் கேட்டுக் கொள்ளுங்கள். அதை விட்டுவிட்டு என் மார்பகங்களை புகழ வேண்டாம். எனக்கு அழகான மார்பகம் உள்ளது. உங்களுக்கு என்ன பிரச்சனை? உங்க அம்மாவுக்கு இல்லையா? எல்லா பெண்களுக்கும் மார்பகம் உள்ளது.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய் போன்ற பெரிய பிரபலங்கள் எல்லாம் இந்த தகவலை தெரிவிக்காமல் வீட்டில் ஜாலியாக அமர்ந்து டிவி பார்க்கிறார்கள். தங்களிடம் உள்ள கறுப்பு பணத்தை என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். என்னிடம் கறுப்பு பணம் இல்லை.

English summary
Telugu actress Shraavya Reddy blasted a fan who asked her breast size on facebook.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil