Stree 2: அதிரடி காட்டும் ஷ்ரத்தா கபூரின் ஸ்ட்ரீ 2 பட கலெக்ஷன்ஸ்.. அடேங்கப்பா ரூ.560 கோடியா?
சென்னை: நடிகர் ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2018ம் ஆண்டில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமானது ஸ்ட்ரீ. ஹாரர் காமெடி தளத்தில் வெளியான இந்தப் படத்தின் வரவேற்பையடுத்து தற்போது படத்தின் 2வது பாகம் வெளியாகி உள்ளது.
கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டமாக வெளியான ஸ்ட்ரீ 2 படம் சில தினங்களிலேயே அதிரடி வசூல் மழை பொழிந்துள்ளது. இது குறித்து பட குழுவினர் அதிகாரப்பூர்வமான வசூல் எண்ணிக்கையை அறிவித்துள்ளனர். இந்தப் படத்தை அமர் கௌஷிக் இயக்கியுள்ள நிலையில் தமன்னா ஒரு பாடலுக்கு அதிரடி ஆட்டம் போட்டுள்ளார்.

ஸ்ட்ரீ 2 படம்: நடிகர் ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள ஸ்ட்ரீ 2 படம் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை அமர் கௌஷிக் இயக்கியுள்ள நிலையில் பங்கஜ் திரிபாதி, அபர்சக்தி குரானா, அபிஷேக் பானர்ஜி உள்ளிட்டவர்களும் இந்த படத்தில் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஸ்ட்ரீ படத்தின் முதல் பாகம் கடந்த 2018ம் ஆண்டில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை சென்றடைந்து மிகப் பெரிய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்தது.
தமன்னாவின் ஆட்டம்: இந்நிலையில் ஐந்து ஆண்டுகள் இடைவெளியில் இந்த படத்தின் 2வது பாகம் தற்போது வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. ஹாரர் காமெடி களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகை தமன்னாவும் ஆஜ் கி ராத் என்ற பாட்டுக்கு அதிரடி ஆட்டம் போட்டுள்ளார். இந்த பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. படம் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களின் வரவேற்பை பெற்று வசூலையும் குவித்துள்ளது. கடந்த சில தினங்களில் இந்த படத்தின் வசூல் 560 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் ரிலீசான முதல் நாளிலேயே 50 கோடி ரூபாய் வசூலை இந்தப் படம் தாண்டியது.

திகில் நகைச்சுவை படம்: 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் தற்போது சில தினங்களிலேயே 10 மடங்கு வசூலை பெற்றுள்ளது. இந்தப் படத்துடன் வெளியான அக்ஷய் குமாரின் கேல் கேல் மெயின், மற்றும் ஜான் ஆப்ரஹாமின் வேடா படங்களுடன் மோதி ஸ்ட்ரீ 2 படம் இந்த சாதனையை நிறைவேற்றியுள்ளது. தொடர்ந்து இந்த படம் அடுத்தடுத்த தினங்களிலும் அதிரடியாக வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திகில் நகைச்சுவை படங்களை இயக்குவது மிகவும் சவாலான விஷயம் என்ற நிலையில் அதை படத்தின் இயக்குநர் சிறப்பாக சாத்தியப்படுத்தியுள்ளார்.
கடத்தப்படும் பெண்கள்: முதல் பாகத்தில் ரசிகர்களை கவர்ந்த படத்தின் அம்சங்கள் அனைத்தும் இந்த இரண்டாவது பாகத்திலும மிகச்சிறப்பாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் புத்திசாலித்தனமான ஸ்கிரிப்ட் ரசிகர்களிடையே அப்படியே கடத்தப்படுகிறது. முதல் பாகத்தில் ஆண்கள் கடத்தப்பட்ட நிலையில், தற்போது பெண்கள் பயமுறுத்தப்படுகின்றனர் மற்றும் கடத்தப்படுகின்றனர்.


Click it and Unblock the Notifications











