twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆம்பளைங்க சட்டையில்லாம நிக்கலாம்.. பொம்பளைங்க பிராவோட நிக்கக்கூடாதா.. வரிந்துக்கட்டிய பிரபல நடிகை!

    |

    சென்னை: பார்க்கில் ஸ்போர்ட்ஸ் பிராவில் உடற்பயிற்சி செய்த நடிகை சம்யுக்தா தாக்கப்பட்டதற்கு பிரபல நடிகையான ஷ்ரதா ஸ்ரீநாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    சம்யுக்தா ஹெக்டேக்கு நேர்ந்த கொடுமை.. நியாயம் கேட்ட சக நடிகை

    கோமாளி, பப்பி, வாட்ச்மேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் சம்யுக்தா ஹெக்டே. தமிழ் மட்டுமின்றி கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.

    இந்நிலையில் நடிகை சம்யுக்தா பெங்களூரில் உள்ள ஒரு பார்க்கில் நேற்று தனது நண்பர்களுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார்.

     'அதுல நடிச்சீங்கள்ல, இதுலயும் பண்ணுங்க..' திடீரென முளைத்த முத்தக்காட்சி.. ஆவேசமாக மறுத்த நடிகை! 'அதுல நடிச்சீங்கள்ல, இதுலயும் பண்ணுங்க..' திடீரென முளைத்த முத்தக்காட்சி.. ஆவேசமாக மறுத்த நடிகை!

    ஸ்போர்ட்ஸ் பிரா

    ஸ்போர்ட்ஸ் பிரா

    அப்போது அங்கு வந்த ஒரு பெண் சிலரை கூட்டி குழுவாக சேர்ந்துக் கொணடு சம்யுக்தாவை தாக்கியுள்ளார். பார்க்கில் ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்துக் கொண்டு உடற்பயிற்சி செய்ததற்காக அவரை தாக்கியுள்ளனர்.

    இன்ஸ்டா லைவ்

    இன்ஸ்டா லைவ்

    அதோடு சம்யுக்தா மற்றும் அவரது நண்பர்கள் போதை பொருட்களை உட்கொண்டதாகவும் பொய்யான குற்றச்சாட்டை கூறியுள்ளனர். இதுதொடர்பாக சம்யுக்தா தனது இன்ஸ்டாகிராம் லைவில் கதறியப்படி வீடியோவையும் ஷேர் செய்தார்.

    பிரபல நடிகை ஆதரவு

    பிரபல நடிகை ஆதரவு

    இந்த சம்பவம் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சக நடிகையான ஷ்ரதா ஸ்ரீநாத் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் வழக்கறிஞரான ஷ்ரதா ஸ்ரீநாத், இதுதொடர்பாக இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ள பதிவில், தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து சம்யுக்தா சோஷியல் மீடியாவில் பகிர்ந்தது துணிச்சலான செயல் என பாராட்டியுள்ளர்.

    நடவடிக்கை எடுக்கலாம்

    நடவடிக்கை எடுக்கலாம்

    மேலும் தாக்குதல், அவதூறு, தவறாக சிறை. ஒரு முன்னாள் வழக்கறிஞராக நான் சொல்கிறேன். இந்த மூன்று குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சம்யுக்தா இந்த பெண்மணியையும், அவளுக்கு ஆதரவாக திரண்ட ஆண்களின் கும்பல் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும். (நான் தவறாக இருந்தால் என்னைத் திருத்துங்கள்)

    ஆண்கள் சட்டை போடாமல்

    ஆண்கள் சட்டை போடாமல்

    நீங்கள் சொல்லுங்கள். இது பெண்களுக்கு சமமான உலகமா? ஒரு ஆண் மேல் சட்டையில்லாமல் அல்லது ஒரே ஒரு உடையில் ஓடலாம், யாரும் கண்களை கூட இமைக்க மாட்டார்கள். ஆனால் ஒரு பெண் சில நிமிடங்கள் ஸ்போர்ட்ஸ் ப்ரா அணிந்திருந்தால் அநாகரீக குற்றச்சாட்டுக்கு ஆளாகிறார்.

    இது அசிங்கம்

    இது அசிங்கம்

    முற்றிலும் வேறுபட்ட குற்றச்சாட்டுக்களுக்குள் இழுத்துச் செல்லப்படுவார், காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார் இது அதிர்ச்சியாக உள்ளது. இது அசிங்கம். இது அவமானம். சம்யுக்தா ஒரு வலிமையான பெண். இதை அவள் நன்றாக கையாண்டாள். எங்களுக்காக போராடியதற்கு நன்றி சம்."

    கொடூர தாக்குதல்

    கொடூர தாக்குதல்

    மேலும் மற்றொரு ஸ்டோரியில் "எங்கள் தலைமுறை மக்கள் இதை நிறைய கேள்விப்பட்டிருப்பார்கள்." அவர் எப்படி ஆடை அணிந்திருந்தார் என்று நீங்கள் பார்த்தீர்களா? அந்தப் பெண் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார். "எனவே இந்த லாஜிக்கின்படி ஸ்போர்ட்ஸ் ப்ரா அணிந்த ஒரு பெண் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். பாலியல் ரீதியாக தாக்கப்பட்டுள்ளார்.

    விளாசிய ஷ்ரதா

    விளாசிய ஷ்ரதா

    அவருக்கு ஏதேனும் நேர்ந்தால், அவர் புகார் செய்ய உரிமை இல்லை (அல்லது அழ வேண்டும், ஏனென்றால் பெண்கள் அதைத்தான் செய்ய வேண்டும் இல்லையா?)." இவ்வாறு நடிகை ஷ்ரதா விளாசி தள்ளியிருக்கிறார். இதனிடையே சம்யுக்தாவும் தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் இந்த மக்கள் மத்தியில் ஸ்ட்ராங்காக இருப்பது அவ்வளவு ஈஸி அல்ல என கூறி மக்களிடம் ஆதரவு கேட்டுள்ளார்.

    English summary
    Actress Shraddha Srinath supports Samyuktha hegde. She slams people who attacked her in a park for wearing sports bra.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X