Don't Miss!
- News அமவுண்டை பாதியாக குறைத்த மா.செ.க்கள்..பாதியில் பறந்த ஏஜெண்ட்கள்! என்ன இது இரட்டை இலைக்கு வந்த சோதனை?
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Finance ப்ளே ஸ்கூல் பையனுக்கு ரூ. 4,30,000 கட்டணமா.. ட்ரெண்ட் ஆகும் தந்தையின் கதறல் போஸ்ட்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
கேட்டீங்களா கேட்டீங்களா.. அருள் நிதியின் அடுத்த ஜோடி யாரு தெரியுமுங்களா!
அருள்நிதி நடிக்கும் அடுத்த படத்தில் விக்ரம் வேதா நடிகை ஷ்ரதா ஸ்ரீநாத் நடிக்கிறார்!
சென்னை: பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் திரைப்படத்தில் ஷ்ரதா ஸ்ரீநாத் ஒப்பந்தமாகியுள்ளார்.
விக்ரம் வேதா திரைப்படத்தில் வேதாவைத் தேடும் போலீஸ் அதிகாரியாக விக்ரம் கதாபாத்திரத்தில் மாதவன் கலக்க, அதே வேதாவை ஜாமினில் எடுத்து வக்கீலாக சவால் விட்டிருப்பார் நடிகை ஷ்ரதா ஸ்ரீநாத்.
ஒல்லியான அழகு, லாவகமாக விஸ்கியை சுவைப்பது, முரட்டுத்தனமாக முரண்டுபிடிப்பது அதே நேரத்தில் காதலோடு மாதவனுடன் ரொமான்ஸ் என எல்லாவற்றிலும் கலக்கியிருப்பார் காந்தக் கண்ணழகி ஷ்ரதா ஸ்ரீநாத்.
இப்படி விக்ரம் வேதாவில் மனம் கவர்ந்த ஷ்ரதா, அதன்பிறகு நிவின் பாலியுடன், ரிச்சியில் தலையை காட்டினார். பிறகு கன்னட சினிமாவிற்கு தடம் பெயர்ந்த இந்த பெங்களூரு எக்ஸ்பிரஸ், இப்போது மீண்டும் மாதவனுடன் மாராவில் நடித்து வருகிறது.
மாதவனுடன் கைகோர்க்கும் அதே வேளை, அருள்நிதி நடிக்கும் அடுத்த படத்திற்கும் ஒப்பந்தமாகியுள்ளார். பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்திற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான எஸ்.பி.சினிமாஸ் இதை உறுதிபடுத்தியுள்ளது.
இரவுக்கு ஆயிரம் கண்கள் வெற்றியைத் தொடர்ந்து பரத் நீலகண்டன் திரைப்படத்திலும், புகழேந்தி எனும் நான் எனும் படத்திலும் அருள்நிதி நடித்து வருகிறார்.
ஷ்ரதா, சிரத்தையுடன் தொடர்ந்து நடிங்க!