இவங்க ரெண்டு பேரும் என் வாழ்க்கையின் ஆசிர்வாதம்.. நடிகை ஸ்ரேயா உருக்கம்!
சென்னை: நடிகை ஸ்ரேயா சரண் அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். தமிழில் விஜய், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ள ஸ்ரேயா சரண், திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான நிலையிலும் தொடர்ந்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
ஆஸ்கார் விருது பெற்ற ஆர்ஆர்ஆர் படத்திலும் ஸ்ரேயா சரண் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போதும் சமூக வலைதளங்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் ஸ்ரேயா சரண்,தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தன்னுடைய ஆசீர்வாதமாக தன்னுடைய கணவர் மற்றும் மகளை குறிப்பிட்டுள்ளார்.

நடிகை ஸ்ரேயா சரண்: நடிகை ஸ்ரேயா சரண் தமிழில் விஜய். விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை கொடுத்தவர். திருமணமாகி குழந்தைக்கு தாயாகிய நிலையிலும் இவர் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். தன்னுடைய குழந்தை பிறப்பின் போது சில காலங்கள் படங்களில் இருந்து ஓய்வு பெற்ற இவர் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தேசிய விருது வென்ற ஆர்ஆர்ஆர் படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார் ஸ்ரேயா சரண். இந்நிலையில் தன்னுடைய வாழ்க்கையின் ஆசிர்வாதமாக தன்னுடைய கணவர் மற்றும் குழந்தையை குறிப்பிட்டு பேசியுள்ளார் ஸ்ரேயா.
கணவரால் கிடைத்த மாற்றம்: படங்களில் அடுத்தடுத்து நடித்துவரும் ஸ்ரேயா சரண், சமூக வலைதளங்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் பிரபல வார இதழுக்கு அவர் கொடுத்துள்ள பேட்டியில், தன்னுடைய தற்போதைய நிலைமைக்கு காரணம் தன்னுடைய கணவர் ஆண்ட்ரி தான் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தினந்தோறும் எழுந்தவுடன் தனக்குள் நிறைய சுய சந்தேகங்கள் எழும் என்றும், காலையில் எழுந்ததும் இன்றைக்கு என்ன செய்யப் போகிறேன், என் லுக் ஓகேவா என்றெல்லாம் சந்தேகங்கள் வரும் என்றும் தெரிவித்துள்ளார். அதையெல்லாம் ஆண்ட்ரி தான் மாற்றினார் என்றும் தான் எப்பொழுது ஸ்ட்ரெஸ்ஸாக இருந்தாலும் உடனே தன்னை அவர் மாற்றி விடுவார் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பெஸ்ட் தருணங்கள்: ஆண்ட்ரியுடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் தன் லைஃப்பில் பெஸ்ட் தருணங்களாக தான் இருக்கும் என்றும் ஸ்ரேயா குறிப்பிட்டுள்ளார். இதனிடையே தன்னுடைய வாழ்க்கை மாற்றத்திற்கு கணவர் ஆண்ட்ரி போலவே தன் மகள் ராதாவும் மிகப்பெரிய அளவில் பங்காற்றி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அம்மாவான பிறகுதான் தான் தன்னை நேசிக்க கற்றுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவர்கள் இரண்டு பேரும் தன்னுடைய வாழ்க்கையில் வந்ததை மிகப்பெரிய ஆசீர்வாதமாக கருதுவதாகவும் ஸ்ரேயா தெரிவித்துள்ளார். பல நடிகர்களுடன் நடித்துள்ள ஸ்ரேயா சரண் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார்.
ரசிகர்கள் ஆச்சர்யம்: தன்னுடைய மகள் மற்றும் கணவருடன் இருக்கும் சிறப்பான தருணங்களை அவர் அடுத்தடுத்து பதிவிட்டு வருகிறார். பொதுவெளிகளிலும் பல நிகழ்ச்சிகளில் மிகவும் கவர்ச்சியான உடை அணிந்து அனைத்து ரசிகர்களையும் திக்குமுக்காடச் செய்து வருகிறார் ஸ்ரேயா சரண். மிகவும் சின்னப் பெண்ணாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்த இவரது அடுத்தடுத்த கட்டங்கள், ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்து வருகின்றன. ஒவ்வொரு தருணத்தையும் அவர் கொண்டாடி வருகிறார்.


Click it and Unblock the Notifications











