கணவர் தெருவில் இறங்கி குத்தாட்டம்… பார்த்து ரசித்த நடிகை.. வைரல் வீடியோ!

ரஷ்யா : ரஷ்யாவில் ஒரு தெருவில் ஆன்ரே கோஷீவ் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஸ்ரேயா. அந்த வீடியோ இப்போது அனைவராலும் ரசிக்கப்பட்டும், பகிரப்பட்டும் வருகிறது.

Recommended Video

பிகினியில் நீச்சல் குளத்தில் குளித்த ஷ்ரேயா

சிறுத்த இடையுடன், சிங்கார நடையுடன் தன்னுடைய குயூட்டான நடிப்பால் இந்தியாவில் பல மொழிகளில் நடித்து வந்தவர் ஸ்ரேயா சரண். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்றீ கோஷீவ்-ஐ நீண்ட வருடங்களாக காதலித்து உதய்ப்பூரில் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பிறகு இருவரும் தங்களது திருமண வாழ்க்கையை மிகவும் சந்தோசமாக நடத்தி வருகின்றனர் அதில் சிலவற்றை ஸ்ரேயா அவ்வப்போது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்தும் வருகிறார்.

சூப்பர் ஸ்டார்ஸ் ஜோடி

சூப்பர் ஸ்டார்ஸ் ஜோடி

சில ஆண்டுகளுக்கு முன் இவர் தான் முன்னணி ஹீரோயின், அனைத்து மொழி சூப்பர் ஸ்டார்களுடனும் ஜோடி போட்டு விட்டார். தமிழில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சேர்ந்து நடித்த சிவாஜி படம் மிகப்பெரிய வசூலை வாரி குவித்தது. மேலும் இவர் சிவாஜி,கந்தசாமி, மனம், ரௌத்திரம் போன்ற படங்களுக்காக சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டு விருதுகளையும் வாங்கியுள்ளார்.

சரியான பதில்

சரியான பதில்

சில நாட்களுக்கு முன்னர் இவர் தனது கணவரின் பிறந்த நாளன்று ஒரு சமூகவலைத்தளத்தில் நேரலையில் வந்து இருவரும் பேசிக்கொண்டிருந்த போது அதில் ஒருவர் கமெண்டில் உங்களது முன்னழகு பார்க்க மிகவும் வசீகரமாக உள்ளது என கூறினார். அதற்கு ஸ்ரேயா தனது முகத்தை சுளித்தவாறு என்ன ஒரு கேவலமான கமெண்ட் என்றார், ஆண்றீ அதற்கு மிகவும் கூலாக ஆமாம் நீங்கள் சொன்னது உண்மை தான் நீங்கள் சொன்னதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதை பற்றி இன்னும் நிறைய எழுதுங்கள் என கூழாகவும், அந்த நாகரீகமற்ற நபருக்கு பதிலளித்த அனைவரின் பாராட்டை பெற்றார்.

காத்திருப்பு

காத்திருப்பு

ஸ்ரேயா நடித்து இப்போதா அப்போதா என வெளியாக காத்திருக்கும் தமிழ் படம் நரகாசூரன் இந்த படத்தை துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அரவிந்த் சுவாமி, ஸ்ரேயா சரண், ஆத்மிகா, சுந்தீப் கிஷான் மற்றும் மலையாள நடிகரும் பிரித்விராஜின் அண்ணனுமான இந்திரஜித் போன்ற பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருக்கும் இந்த படம் வெகு நாட்களாக திரைக்கு வர காத்திருக்கிறது.

மகிழ்ச்சியில் ஸ்ரேயா

மகிழ்ச்சியில் ஸ்ரேயா

உலகமே இப்போது அடங்கி ஒடுங்கி வீட்டில் இருக்கும் நிலையில் இருவரும் அடிக்கடி சமூகவலைத்தளங்களில் தங்களது அழகான சேட்டைகளை அவ்வப்போது பதிவு செய்து வருவது வழக்கமாக கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து இப்போது ஸ்ரேயா தனது கணவரை வெளிநாட்டில் ஒரு தெருவில் நம்ம ஊரு குத்தாட்டம் போட வைத்து அழகு பார்த்தது மட்டுமில்லாமல் அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளார். ஆண்றீ ஒரு நேஷ்னல் லெவல் டென்னிஸ் பிளேயர், அதுமட்டும் இல்லாமல் செயின் ரெஸ்டாரண்ட்களையும் சொந்தமாக வைத்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த பல பெண்கள் இப்படி ஒரு கணவன் நமக்கு கிடைக்க மாட்டாரா என ஏங்கி வருகின்றனர். தன்னுடைய மனைவியின் சந்தோசத்திற்காக இவர் ஆடியது பலரின் அன்பையும் பெற்று வருகிறது. மிஸ்டர் ஆண்றீ யு ஆர் கிரேட் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X