மல்லாக்க படுத்துக்கொண்டு.. போட்டோவுக்கு போஸ்…ஸ்ரேயாவின் அலப்பறை!

ரஷ்யா : தண்ணீரில் மல்லாக்க படுத்து கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் ஸ்ரேயா. அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

Recommended Video

ஆடல் பாடல் Quarantine | Amala Paul, Manimegalai, Shriya Saran, Chithra

பல மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமானவர்களின் முக்கிய பங்கு ஸ்ரேயாவிற்கு உண்டு. அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பல பல ஹிட் குத்தாட்டங்களை போட்டவர் தான் ஸ்ரேயா.

சமீப காலமாகவே அவர் தன் கணவருடன் எடுக்கும் வீடியோவையும் , புகைப்படங்களையும் வெளியிட்டு இணையதளத்தில் ஆக்ட்டிவாகவே இருக்கிறார். அவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் சூப்பர் வைரல் தான் .

சூப்பர் டைம் பாஸ்

சூப்பர் டைம் பாஸ்

எப்போதும் ஷூட்டிங் என்று சுற்றி கொண்டு இருக்கும் நடிகைகளுக்கு , இந்த ஊரடங்கு குடும்பத்துடன் கழிக்க ஒரு நல்ல பொழுதுபோக்கு காலமாகவே இருக்கின்றது . அனைத்து நடிகைகளும் இந்த நாட்களை விடுமுறை நாட்களாகவே நினைத்து என்ஜாய் செய்து வருகின்றனர். குடும்பத்துடன் விளையாடுவது, புது புது உணவுகளை சமைப்பது , நடனம் ஆடுவது, போட்டோஷூட்ஸ் என்று பிஸியாகவே இருக்கின்றனர்.

செம்ம குஷி

செம்ம குஷி

இந்த ஊரடங்கு நேரத்திலும் அடங்காமல் ஸ்ரேயா தன் கணவருடன் நடுரோட்டில் எப்போதும் குத்தாட்டம் போட்டு கொண்டே இருக்கிறார்.

சமீபத்தில் மழையில் இருவரும் மாறி மாறி ஆட்டம் போட்ட வீடியோவாக வெளியிட்டார். அந்த வீடியோ நல்ல வரவேற்பை பெற்றது. அது அடங்குவதற்குள் மறுபடியும் கணவர் நடு ரோட்டில் குத்தாட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார் .

இணையத்தில் எப்போதும் பிஸி

இணையத்தில் எப்போதும் பிஸி

எப்போதும் சோஷியல் மீடியாக்களில் பிஸியாகவே இருக்கும் ஸ்ரேயா அவ்வப்போது எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு கொண்டே இருக்கிறார். அவர் வெளியிடும் புகைப்படங்களாகட்டும் , வீடியோக்களாகட்டும் அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறார். பலரும் இந்த பதிவுகளை பகிர்ந்தும் வருகின்றனர். அதனால் இன்னும் ஆக்ட்டிவாகவே இருக்கிறார் ஸ்ரேயா.

துரு துரு நடிகை

துரு துரு நடிகை

அவர் நடிக்கும் படங்களில் ஆகட்டும் , நிஜ வாழ்க்கையில் ஆகட்டும் எப்போதும் துரு துருவென்றும், சுட்டித்தனமாகவே இருந்து வருகிறார் ஸ்ரேயா. அதுவே அவரது பலமாகும் . குழந்தை போல் எப்போதும் விளையாடிக்கொண்டே இருக்கும் ஸ்ரேயா. தனது கணவருடனும் அதே குறும்புகளை செய்து விதவிதமாக புகைப்படங்களை எடுத்து அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

நீரில் மூழ்கி

நீரில் மூழ்கி

தற்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தில் ஒரு நீர் வீழ்ச்சியில் மல்லாக்க படுத்து கொண்டு இருக்கிறார். அந்த புகைப்படத்தில் அழகாக மெருன் நிறத்தில் மேல்சட்டை அணிந்துள்ளார். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இது தான் வழி என்று சொல்லும் அளவிற்கு தன்னை மறந்து படுத்து கொண்டு இருக்கிறார் ஸ்ரேயா. மேலும், இந்த புகைப்படத்தை பார்த்தால் ஏதோ ஓவியம் வரைந்தது போல உள்ளது என்று ரசிகர்கள் கூறுகின்றனர். இருந்தாலும் இந்த புகைப்படம் ரசிக்கும் படி அழகாகவே உள்ளது. ஸ்ரேயா இப்படி ஆட்டம் போடுவதை பார்க்கும் ரசிகர்கள் அடுத்து இவர் நடித்து வெளிவர இருக்கும் நரகாசுரன் படத்திற்காக காத்துகொண்டு இருக்கின்றனர் . இந்த ஊரடங்கு மூடிவிற்கு வந்த பிறகு அதைப்பற்றிய தகவல் தெரிய வரும் என்று நாம் நம்பலாம் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X