உங்களுக்கு வேற இடமே கிடைக்கலையா.. நிர்வாண பெண் அருகே போட்டோ எடுத்து திட்டு வாங்கிய பிரபல நடிகை!

நடிகை ஸ்ரேயாவின் புதிய புகைப்படம் ஒன்று சர்ச்சையில் சிக்கியுள்ளது.

சென்னை: நடிகை ஸ்ரேயா தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சர்ச்சையில் சிக்கியுள்ளது.

ரஜினி, விஜய் என தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் ஸ்ரேயா. தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். பின் ஒருபாடலுக்கு நடனம் என்ற நிலைக்கு சென்று, இறுதியாக சிம்பு நடித்த அன்பானவன், அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்திருந்தார்.

செட்டிலாகிவிட்டார்

செட்டிலாகிவிட்டார்

தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாததால், திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார். ஆனாலும், அவ்வப்போது தனது சமூகவலைதளப் பக்கத்தில் தனது புகைப்படங்களைப் பதிவு செய்து வருகிறார்.

நிர்வாணப் பெண்

நிர்வாணப் பெண்

இந்நிலையில், சமீபத்தில் கொலம்பியாவில் ஓவியக் கண்காட்சி ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் வெளியிட்டிருந்தார். அதில், ஒரு படத்தில் நிர்வாணப் பெண்ணின் முன்னே நின்று அவர் போட்டோவிற்கு போஸ் கொடுத்திருந்தார். அதுவும் பறக்கும் முத்தம் கொடுப்பது போல் அவர் நின்றிருந்தார்.

ரசிகர்கள் பாராட்டு

ரசிகர்கள் பாராட்டு

ஸ்ரேயாவின் இந்தப் புகைப்படங்கள் அழகாக இருப்பதாக பாராட்டியுள்ள ரசிகர்கள், அந்த நிர்வாணப் பெண் புகைப்படத்தைப் பார்த்து மட்டும் சற்று முகம் சுளித்துள்ளனர். உங்களுக்கு வேற இடமே கிடைக்கலையா போட்டோ எடுக்க என அவர்கள் கமெண்ட் வெளியிட்டுள்ளனர்.

கவர்ச்சி படங்கள்

கவர்ச்சி படங்கள்

ஸ்ரேயா தனது கிளாமர் புகைப்படங்களையும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிடுவது வழக்கம். அதற்கு ஏராளமான ரசிகர்கள் இப்போதும் உள்ளனர். ஒரு ஆங்கில நாளிதழுக்கு ஸ்ரேயா கொடுத்த கவர்ச்சி போட்டோக்கள் இன்றளவும் இணையதளங்களில் உலாவிக்கொண்டிருக்கிறது.

நடிப்பதில் ஆர்வம்

நடிப்பதில் ஆர்வம்

திருமணத்திற்குப் பிறகும் சினிமாவில் நடிக்க ஸ்ரேயா ஆர்வமாய் தான் இருக்கிறார். படவாய்ப்புகளுக்காகத் தான் தனது புகைப்படங்களை அவர் சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறார் என்கின்றனர். விமல் நடிப்பில் உருவாகிவரும் சண்டக்காரி படத்தின் மூலம் தமிழில் அவர் ரீஎன்ட்ரி தரஉள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: shriya saran ஸ்ரேயா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X