Don't Miss!
- News
ரொம்ப அரிதான நிகழ்வு.. "இந்த" தேதியில் இங்கெல்லாம் மழை கொட்டும்.. தமிழ்நாடு வெதர்மேன் தந்த வார்னிங்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Sports
ஹர்திக் பாண்டியா முன் காத்திருக்கும் சவால்..ஒரு தவறு செய்தால் மொத்தமாக குளோஸ்..பாடம் கற்பாரா கேப்டன்?
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
மேஜிக்… மேஜிக்… கண்ணை மூட வைத்து... ஸ்ரேயாவை ஏமாற்றிய கணவர் !
சென்னை : விஜய், ரஜினிகாந்த், தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தவர் ஸ்ரேயா சரண்.
பட வாய்ப்புகள் இல்லாததால் கிடைத்த வேடங்களில் நடித்து வருகிறார்.
ரசிகர்கள் தன்னை நினைவு வைத்துக்கொள்ளும்படி தொடர்ந்து சமூகவலைத்தள பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு தெறிக்கவிட்டு வருகிறார்.

முன்னணி நடிகருடன்
தென்னிந்தியாவில் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரேயா சரண் நடிப்பு மட்டுமல்லாமல் நடனம் கவர்ச்சி என அனைத்திலும் அடித்து தூள் கிளப்பி முன்னணி நடிகையாக வலம் வந்தவர். குறிப்பாக விஜய், ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து அனைவரையும் கொள்ளை கொண்ட இவருக்கு மழை திரைப்படம் மிகப்பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது.
குத்தாட்டம்
சிவாஜி, திருவிளையாடல் ஆரம்பம், அழகியதமிழ்மகன், குட்டி, கந்தசாமி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வெற்றிக் கொடியை பறக்க விட்டு வந்த ஸ்ரேயா இடையில் சில படங்களில் ஒரு சில பாடலுக்கு குத்தாட்டம் போட்டு சென்றார்.

கிடைத்த வேடத்தில்
பல திரைப்படங்களில் முன்னணியாக நடித்தப்பிறகும், பட வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது கிடைத்த வேடத்தில் நடித்து வருகிறார். தமிழில் இவருக்கு கமனம், சண்டக்காரி, நரகாசுரன் ஆகிய திரைப்படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன.
Recommended Video

திருமணத்திற்குப் பிறகு
திருமணத்திற்குப் பிறகு கணவருடன் செம ரொமான்டிக்கான க்யூட் படங்களையும், கவர்ச்சியில் ரணகளப்படுத்தும் புகைப்படங்களையும் வலைத்தளத்தில் பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் மேஜிக் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், ஸ்ரேயாவின் கணவர் மேஜிக் செய்வது போல, கண்ணை மூடவைத்து ஸ்ரேயாவை ஏமாற்றுகிறார். இந்த வீடியோ பார்ப்பதற்கு மிகவும் காமெடியாக உள்ளது.