அறிகுறியெல்லாம் அப்படியே இருக்கே.. பதறியடித்து கணவரை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து சென்ற நடிகை ஸ்ரேயா!

சென்னை: கணவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் நடிகை ஸ்ரேயா உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ஸ்ரேயா தமிழில் உனக்கு 20 எனக்கு 18 படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் தெலுங்கு இந்தி என பிஸியாக நடித்து வந்தார் ஷ்ரேயா.

தமிழில் ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம் என முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

காதலருடன் திருமணம்

காதலருடன் திருமணம்

தென்னிந்திய சினிமாவில் பீக்கில் இருந்த போதே பாலிவுட்டிலும் தனது கொடியை பறக்கவிட்டார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவை சேர்ந்த தனது காதலரான ஆண்ட்ரேய் கோஸ்சீவை திருமணம் செய்து கொண்டார். இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகும்.

20 லட்சம் பேர் பாதிப்பு

20 லட்சம் பேர் பாதிப்பு

இந்நிலையில் உலகையே மிரட்டும் கொரோனாவால் மிரண்டு போயிருக்கிறார் ஸ்ரேயா. உலகம் முழுக்க மிரட்டி வரும் கொரோனாவுக்கு, இதுவரை ஒரு லட்சத்து 26 ஆயிரம் பேர் பலியாகி இருக்கின்றனர். 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா அறிகுறி

கொரோனா அறிகுறி

கொரோனாவால் அதிகம் பாதிப்புக்குள்ளான ஸ்பெயினின் பார்சிலோனா நகரில்தான் நடிகை ஸ்ரேயா தனது கணவர் ஆண்ட்ரே கோஸ்சீவ் உடன் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது கணவருக்கு காய்ச்சல், இருமல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் தெரிந்துள்ளது.

மருத்துவமனைக்கு ஓட்டம்

மருத்துவமனைக்கு ஓட்டம்

இதனால் பதறிப்போன நடிகை ஸ்ரேயா, தனது கணவரை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஆண்ட்ரேய்யை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா இல்லை என உறுதிப்படுத்தியுள்ளனர். இதன் பிறகே நிம்மதி பெருமூச்சு வீட்டுள்ளார் ஸ்ரேயா.

செல்ப் ஐசோலேட்

செல்ப் ஐசோலேட்

பின்னர் கொரோனா இல்லையென்றாலும் மருத்துவமனையில் இருக்க வேண்டாம் என்றும் இருந்தால் கொரோனா தொற்று ஏற்பட்டு விடும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தனது கணவரை அங்கிருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்று இருவரும் தங்களை செல்ப் ஐசோலேட் செய்துள்ளனர்.

குணமடைந்த கணவர்

குணமடைந்த கணவர்

இருவரும் தனித்தனி அறைகளில் உறங்கி தொடர்ந்து மருந்துகளையும் எடுத்து வந்துள்ளனர். தற்போது ஆண்ட்ரேய் கோஸ்சீவ் கொரோனா அறிகுறிகளில் இருந்து குணமடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார ஸ்ரேயா. மேலும் தனது பெற்றோரை மிஸ் செய்வதாக கூறிய ஸ்ரேயா, தனது தாயார் சொன்ன சில ரெசிப்பிக்களை பின்பற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X