என்னதான் கணவர் என்றாலும் பப்ளிக்கில் இப்படியா.. நடிகை ஷ்ரேயாவின் வீடியோவை பார்த்து பொங்கும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகை ஷ்ரேயா தனது கணவருடன் பிகினியில் ஆட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழில் உனக்கு 20 எனக்கு 18 படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷ்ரேயா. அப்படத்தில் ஹீரோவின் கல்லூரி தோழியாக நடித்திருப்பார் ஷ்ரேயா.
தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு டாப் நடிகையாக வலம் வந்தார்.

முன்னணி நடிகர்களுடன்
தொடர்ந்து தமிழ் தெலுங்கு இந்தி என பிஸியாக நடித்து வந்தார் ஷ்ரேயா. தமிழில் ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார்.

மீண்டும் நடிப்பு
கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிநாட்டைச் சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் ஷ்ரேயா. திருமணத்திற்கு பிறகும் நடிக்க ஆர்வமாய் உள்ளார். இதற்காக விதவிதமாக போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வருகிறார் ஷ்ரேயா.

குளிக்கும் போட்டோ
தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது பிகினியில் ஆற்றில் குளிக்கும் போட்டோவை ஷேர் செய்திருந்தார் ஷ்ரேயா. அந்த போட்டோக்கள் லைக்ஸ்களை குவித்தது.
Recommended Video

பிகினியில் ரொமான்ஸ்
இந்நிலையில் தனது கணவருடன் போட்டிங் சென்றுள்ளார் ஷ்ரேயா சரண். போட்டிங்கின் போது பிகினி அணிந்து கணவருடன் படு நெருக்கமாய் அமர்ந்து ரொமான்ஸ் செய்துள்ளார்.

பப்ளிக்கில் இப்படியா?
மேலும் இரண்டாவது வீடியோவில் ஷ்ரேயா எதையோ கேட்க பப்ளிக் என்றும் இல்லாமல் மோசமாய் நடந்து கொள்கிறார் அவரது கணவர். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் என்னதான் கணவர் என்றாலும் பப்ளிக்கில் இப்படியா நடந்து கொள்வது என விளாசி வருகின்றனர்.

லேக்கில் டைவ் அடித்து
தொடர்ந்து பிகினியில் போட்டில் இருந்தப்படியே ஆட்டம் போட்டுள்ளார் ஷ்ரேயா. அந்த வீடியோவையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும் தனது கணவர் போட்டில் இருந்து டைவ் அடித்து லேக்கில் குளிக்கும் வீடியோவை ஷேர் செய்துள்ளார்.

ரொமான்ஸ் வீடியோ
அப்போது தனது கணவரிடம் தன்னிடமிருந்து தப்பித்து ஓடுகிறாயா என்றும் கேட்டுள்ளார் ஷ்ரேயா. இதேபோல் இருவரும் போட்டில் செல்லும் போது ரொமான்ஸ் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு இளைஞர்களை வெறுப்பேற்றியுள்ளார் ஷ்ரேயா.


Click it and Unblock the Notifications