ராஜமவுலி படத்தில் நானும் இருக்கிறேன்.. பிரபல ஹீரோயின் உறுதி.. ஸ்பெயினில் இருந்து திரும்புகிறார்!

By

சென்னை: ராஜமவுலி இயக்கும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் தானும் நடிப்பதாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா நடிப்பில் ராஜமவுலி இயக்கும் படம் 'ஆர்ஆர்ஆர்'. அதாவது, இரத்தம் ரணம் ரெளத்திரம்.

பாகுபலிக்குப் பிறகு ராஜமவுலி இயக்கும் படம் என்பதால் இதற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

அஜய் தேவ்கன்

அஜய் தேவ்கன்

சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீத்தாராம ராஜூ, கொமரம் பீம் ஆகியோர் வாழ்க்கைக் கதையை கொண்ட படம் இது என்று கூறப்படுகிறது. இந்தி நடிகர் அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உட்பட பலர் நடிக்கின்றனர். ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள ரேய் ஸ்டீவன்சன், ஐரிஸ் நடிகை அலிசான் டூடி ஆகியோரும் நடிக்கின்றனர்.

அறிமுகக் காட்சி

அறிமுகக் காட்சி

பாலிவுட் ஹீரோயின் ஆலியா பட், முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். ஜூனியர் என்.டி.ஆர் குரலில் அட்டகாசமாக தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் ராம்சரணின் அறிமுகக் காட்சி கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. அஜய் தேவ்கன், ஆலியா பட் ஆகியோர் இந்தி பதிப்பு காட்சியை வெளியிட, தெலுங்கு வெர்ஷனை ராம்சரண் மற்றும் ராஜமவுலி வெளியிட்டனர்.

ஜூனியர் என்.டி.ஆர்

ஜூனியர் என்.டி.ஆர்

தமிழ்ப் பதிப்பை ஜூனியர் என்.டி.ஆர் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டார். தமிழ் மோஷன் போஸ்டரையும் ஜூனியர் என்.டி.ஆர் வெளியிட்டிருந்தார். தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளில் ஜூனியர் என்.டி.ஆர் தனது சொந்த குரலிலேயே டப்பிங் பேசியுள்ளார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

வெளியிட முடியாது

வெளியிட முடியாது

லாக்டவுன் காரணமாக படத்தின் வேலைகள் இப்போது நிறுத்தப்பட்டுள்ளன. இந்தப் படத்தை ஜனவரி 8 ஆம் தேதி, சங்கராந்திக்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால், இப்போதுள்ளச் சூழலில் அந்த தேதியில் படத்தை வெளியிட முடியாது என்று தயாரிப்பாளர் டிவிவி தனய்யா கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவிந்திருந்தார்.

பார்சிலோனா

பார்சிலோனா

இந்நிலையில் இந்தப் படத்தில் தானும் நடிப்பதாக நடிகை ஸ்ரேயா தெரிவித்துள்ளார். தற்போது தனது கணவர், தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவுடன் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நகரில் இருக்கும் நடிகை ஸ்ரேயா, அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தனது போட்டோ மற்றும் டான்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்தியா திரும்புகிறேன்

இந்தியா திரும்புகிறேன்

ரசிகர்களிடமும் அவர் உரையாடி வருகிறார். அப்போது ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டதும், பார்சிலோனாவில் இருந்து இந்தியா திரும்புவேன் என்றும் இதன் படப்பிடிப்பை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X