தளுக்மொழுக் என மாறிய சில்லுனு ஒரு காதல் குட்டி பாப்பா.. தத்தளிக்கும் ரசிகர்கள்!
சென்னை : திரையில் நாம் கண்டு ரசித்த பல குழந்தை நட்சத்திரங்கள் இப்பொழுது படுஜோராக வளர்ந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து வருகின்றனர்.
இந்த வகையில் சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் சூர்யாவுக்கு குழந்தையாக நடித்து நம் அனைவரையும் கவர்ந்திருந்த அந்த சுட்டிக் குழந்தை நட்சத்திரமும் இப்பொழுது வளர்ந்து விட்டார்.
இந்நிலையில் அவர் வெளியிடும் பல புகைப்படங்கள் இணையத்தை சுற்றி வரும் நிலையில் இப்பொழுது அனைவரையும் வாய் பிளக்க வைக்கும் சூப்பர் கூல் புகைப்படங்கள் பார்க்கும் அனைவரையும் கட்டி இழுத்து வருகிறது.

நடித்து அசத்தியிருப்பார்
சிறுவயதிலேயே திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய நடிகை ஸ்ரேயா சர்மா பல பிரபலமான திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியிருப்பார்.

ஆள் அடையாளம் தெரியாத
தமிழ் சினிமாவில் பேபி ஷாலினி முதல் இப்பொழுது பிரபலமாக இருக்கும் அனிகா சுரேந்திரன் வரை பல குழந்தை நட்சத்திரங்கள் வெள்ளித்திரையில் கலக்கியுள்ளனர். அப்படி படங்களில் நாம் குழந்தை நட்சத்திரமாக பார்த்த முகங்கள் தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்து விட்டார்கள்.

அந்த குழந்தையா இப்படி
ஹீரோயின்கள் பலரும் இப்பொழுது பல போட்டோஷூட்களை நடத்தி வரும் அதே சமயம், வளர்ந்த குழந்தை நட்சத்திரங்களும் முன்னணி ஹீரோயின்களுக்கு இணையாக பல போட்டோஷூட்களை நடத்தி வருகிறார்கள். மேலும், அவர்களை பார்க்கும் போது அந்த குழந்தையா இப்படியெல்லாம் போஸ் குடுக்குது என்று கேட்கும் அளவிற்கு உள்ளது.

அசத்தலான நடிப்பை
அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா சர்மா. குறிப்பாக சூர்யா ஜோதிகா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற "சில்லுனு ஒரு காதல்" திரைப்படத்தில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்து இருப்பார்.

கதாநாயகியாக களமிறங்கினார்
சில்லுனு ஒரு காதல் படத்தை தொடர்ந்து எந்திரன் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் குழந்தை நட்சத்திரமாக வந்து சென்ற ஸ்ரேயா சர்மா 2014 ஆம் ஆண்டு வெளியான ‘கயாகுடு' என்ற படத்தில் கதாநாயகியாக களமிறங்கினார்.

தமிழ் படங்களில் எதிர்பார்த்து
அதன்பிறகு "நிர்மலா கான்வென்ட்" என்ற திரைப்படத்திலும் நடித்திருந்த ஸ்ரேயா சர்மா இன்று வரை தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆகாத நிலையில் பலரும் இவரை தமிழ் படங்களில் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

போதையேற்றும் கவர்ச்சி
இந்நிலையில் இவர் வெளியிடும் சமீபத்திய புகைப்படங்கள் பல வைரலாகி வருவதைத் தொடர்ந்து இப்பொழுது தளுக் மொழுக் என மாறியிருக்கும் ஸ்ரேயா சர்மா போதையேற்றும் கவர்ச்சி காட்டியவாறு புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











