Shruthi haasan : ஹீரோயின்களுக்கு மட்டும் ஏன் இப்படி.. ஸ்ருதிஹாசன் காட்டம்!

சென்னை : நடிகை ஸ்ருதிஹாசன் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். மூத்த நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

சமீபத்தில் வால்டர் வீரய்யா மற்றும் வீரசிம்ஹ ரெட்டி ஆகிய படங்களில் சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து நடித்திருந்தார்.

தற்போது பிரபாசுடன் இணைந்து சலார் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை பிரபல கேஜிஎப் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கியுள்ளார்.

Actress Shruthi haasan angry on costume in snow

நடிகை ஸ்ருதிஹாசன் காட்டம்: நடிகை ஸ்ருதிஹாசன் பாடகியாக தன்னுடைய திரைப்பயணத்தை துவக்கியவர். குழந்தை நட்சத்திரமாகவே தன்னுடைய தந்தையின் படத்தில் நடித்துள்ள இவர், இசையமைப்பாளராகவும் தன்னுடைய சிறப்பை வெளிப்படுத்தியுள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழிகளில் இவர் நடித்து வருகிறார். இடையில் சில பிரச்சினைகள் காரணமாக நடிப்பில் அதிகமாக கவனம் செலுத்தாமல் இருந்த ஸ்ருதிஹாசன், தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த ஜனவரியில் இவரது நடிப்பில் வால்டர் வீரய்யா மற்றும் வீரசிம்ஹரெட்டி ஆகிய படங்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. இந்தப் படங்களில் சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். இந்நிலையில், அடுத்ததாக பிரபாசுடன் இணைந்து சலார் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை கேஜிஎப் படங்களை இயக்கிய பிரஷாந்த் நீல் இயக்கியுள்ளார்.

Actress Shruthi haasan angry on costume in snow

ஸ்ருதிஹாசன் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார். சாந்தனுவுடன் காதலில் உள்ள ஸ்ருதிஹாசன், தன்னுடைய காதலையும் அவ்வப்போது முத்தங்கள் உள்ளிட்டவை மூலம் வெளிப்படுத்தி வருகிறார். தொடர்ந்து போட்டோஷுட்களையும் அதிகமாக வெளியிட்டு வருகிறார். இதன் காரணமாக இவரை இன்ஸ்டாகிராமில் அதிகமான பாலோயர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

ஆனாலும் மூத்த நடிகர்களுடன் நடித்துவருவது குறித்து பல்வேறு கமெண்ட்ஸ்களை பெற்று வருகிறார் ஸ்ருதிஹாசன். தன்னுடைய கருத்துக்களை எப்போதும் போல்டாக பேசிவரும் ஸ்ருதிஹாசன், சமீபத்தில் அவருடைய வெர்ஜினிட்டி குறித்த ரசிகர்களின் கேள்விக்கும் கூலாக பதிலளித்து அனைவரையும் கவர்ந்திருந்தார். இந்நிலையில் தற்போது சிரஞ்சீவியுடன் தான் நடித்திருந்த வால்டர் வீரய்யா படம் குறித்து தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Actress Shruthi haasan angry on costume in snow

அந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு, பனிப்பிரதேசத்தில் டூயட் பாடல் ஒன்று எடுக்கப்பட்டிருந்தது. அந்தப் பாடலில் சிரஞ்சீவி கோட் சூட் போட்டு நடித்திருந்திருப்பார். ஆனால் ஸ்ருதியோ, ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டுடன் சேலை கட்டி நடித்திருப்பார். இந்தப் பாடலை குறிப்பிடும் வகையில், ஹீரோயின்கள் மட்டும் மிகவும் குறைவான ஆடை அணிந்து பனிப்பிரதேசத்தில்கூட ஆட்டம் போடவுள்ளதாகவும் இதை மாற்ற வேண்டும் என்றும் ஸ்ருதி கேட்டுக் கொண்டுள்ளார்.

முக்கியமாக தனக்கு ஸ்னோவில் ஆடவே பிடிக்காது என்றும் ஆனால் பாடலுக்கு தேவை ஏற்படுவதால் தான் அத்தகைய காட்சிகளில் நடிப்பதாகவும் ஸ்ருதி தெரிவித்துள்ளார். அடுத்தடுத்த அதிரடி ஸ்டேட்மெண்ட்களை வெளியிட்டு வருகிறார். கமல்ஹாசனின் மூத்த மகள் என்ற அடையாளம் இருந்தபோதிலும் அதையெல்லாம் யோசிக்காமல் தன்னுடைய வாழ்க்கையை தன்னுடைய விருப்பத்திற்கு தக்கவாறு வாழ்ந்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X