ஹாலிவுட் படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன்..அதிலும் முக்கியமான ரோலாம்!

சென்னை : நடிகை ஸ்ருதிஹாசன் பாடகி, நடிகை, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையை கொண்டவர். தொடர்ந்து பல ஆண்டுகளாள நடித்து வருபவர்.

இவரது நடிப்பில் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய படங்கள் மட்டுமில்லாமல் பாலிவுட் படங்களும் வெளியாகியுள்ளன.

இதனிடையே தற்போது ஹாலிவுட் படங்களிலும் அடுத்தடுத்து நடித்து வருகிறார் ஹ்ருதிஹாசன்.

 நடிகை ஸ்ருதிஹாசன்

நடிகை ஸ்ருதிஹாசன்

நடிகை ஸ்ருதிஹாசன் சில காலங்கள் நடிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலையில் காணப்பட்டார். தொடர்ந்து தற்போது மீண்டும் தன்னுடைய ரீ என்ட்ரியை சிறப்பான வகையில் கொடுத்து வருகிறார். தமிழில் இவருக்கு லாபம் என்ற படத்தை தவிர வேறு படங்கள் இல்லை என்றாலும் தெலுங்கில் பிரபாசுடன் சலார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

 மீண்டும் சினிமா பயணம்

மீண்டும் சினிமா பயணம்

தன்னுடைய நீண்ட நாள் காதலர் சாந்தனு ஹசாரிகாவுடன் இணைந்து வாழ்ந்துவரும் இவர் சில காலங்கள் படங்களில் நடிக்காமல் தவிர்த்து வந்தார். இதனிடையே தற்போது மீண்டும் இவரது சினிமா பயணம் சிறப்பான வகையில் துவங்கியுள்ளது. தமிழில் விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் இவர் நடித்து முடித்துள்ளார்.

 சாந்தனுவுடன் காதல்

சாந்தனுவுடன் காதல்

முன்னதாக வெளிநாட்டை சேர்ந்த மைக்கேல் என்பவருடன் டேட்டிங் செய்துவந்த ஸ்ருதிஹாசன், அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரேக்அப் செய்தார். தொடர்ந்து தற்போது சாந்தனுவுடன் காதலில் உள்ளார். விரைவில் இவர்களது திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

 ஹாலிவுட் படத்தில் நடிக்கும் ஸ்ருதி

ஹாலிவுட் படத்தில் நடிக்கும் ஸ்ருதி

இதனிடையே மீண்டும் நடிப்பில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ள ஸ்ருதிஹாசன், தற்போது ஹாலிவுட் படங்களில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். தற்போது ஹாலிவுட் படத்தின் சூட்டிங்கிற்காக அவர் கிரீசில் உள்ளார். டாப்னே ஷ்மோன் இயக்கும் தி ஐ என்ற சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படத்தில் அவர் லீட் கேரக்டரில் கமிட்டாகியுள்ளார்.

 தி ஐ படத்தின் நாயகி

தி ஐ படத்தின் நாயகி

தி லாஸ்ட் கிங்டம் படத்தில் நடித்த மார்க் ரோலி இந்தப் படத்தில் நடித்து வருகிறார். இம்மாத இதுதியில் ஏதென்ஸ் மற்றும் கோர்புவின் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது. இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஸ்ருதிஹாசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். படம் கடந்த 1980ம் ஆண்டுகளின் கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகவுள்ளது.

 உளவியல் த்ரில்லர் படம்

உளவியல் த்ரில்லர் படம்

உளவியல் களத்தில் த்ரில்லர் படமாக இந்தப் படத்தை டைரக்டர் இயக்கவுள்ளார். ஒரு இளம் விதவை தன்னுடைய கணவன் இறந்த தீவிற்கு சென்று அவருடைய சாம்பலை பரப்புவதை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகவுள்ளது. முன்னதாக சர்வதேச ஆடியோ படமான சாண்ட்மேன் :ஆக்ட் 3 என்ற ஆடியோ படத்திலும் தான் இணைந்துள்ளதாக ஸ்ருதிஹாசன் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 பிரதான கேரக்டர்

பிரதான கேரக்டர்

பாடகி, நடிகை என பன்முகத் திறமை கொண்ட ஸ்ருதிஹாசன் தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் சிறப்பாக தன்னுடைய திறமையை நிரூபித்து தற்போது ஹாலிவுட்டிலும் நுழைந்துள்ளார். தி ஐ படத்தில் அவருக்கு பிரதான கேரக்டர் அமைந்துள்ள நிலையில், அங்கும் தன்னை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X