வீட்டு வேலைக்காரி மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன்: நடிகை சுருதி

By Mayura Akilan

பெங்களூர்: தனக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுகளை கூறிய வீட்டு வேலைக்காரப் பெண் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக" என்று பிரபல கன்னட நடிகை சுருதி கூறியுள்ளார்.

பெங்களூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சுருதி, "எனது வீட்டில் வீட்டு வேலைகள் செய்து வந்த ஷோபா என்பவர், எனக்கு எதிராக தவறான தகவல்களை வெளியிட்டார். பொய் குற்றச்சாட்டுகளை கூறி எனது புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தினார் என்று கூறினார்.

மூன்றாவது நபர்

மூன்றாவது நபர்

ஷோபாவிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது தவறான தகவல்களை வெளியிட்டதை அவர் ஒப்புக்கொண்டார். அவரது பின்னணியில் மூன்றாவது நபர் இருந்து செயல்பட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனக்கு எதிராக சதி

எனக்கு எதிராக சதி

எனக்கு எதிராக சதி திட்டம் தீட்டப்படுவதாக ஏற்கனவே நான் சொன்னேன். அது தற்போது உண்மையாகியுள்ளது. விவாகரத்து பெற்ற எனது கணவர் சந்திரசூட் வேலைக்காரியுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார்.

முன்னாள் கணவருக்குத் தொடர்பு

முன்னாள் கணவருக்குத் தொடர்பு

எனது ஒவ்வொரு நடவடிக்கை பற்றியும் எனது முன்னாள் கணவருக்கு வேலைக்காரி தகவல் கொடுத்துள்ளார். வேலைக்காரி ஷோபா மீது மானநஷ்ட வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன்.

நீதி கிடைக்க வேண்டும்

நீதி கிடைக்க வேண்டும்

இதுகுறித்து நீதிமன்றத்தில் இன்று வழக்கு தாக்கல் செய்கிறேன். எனக்கு ஏற்பட்டுள்ள அநியாயத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுத்துள்ளேன் என்று நடிகை ஸ்ருதி கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X