ஸ்ருதி ஹாசனுடன் இணையும் லோகேஷ் கனகராஜ்..அப்டேட் தந்த ராஜ்கமல் நிறுவனம்..குழம்பும் பேன்ஸ்!
சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் ராஜ்கமல் நிறுவனம் மீண்டும் இணைவது பற்றிய புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. ஸ்ருதி ஹாசன் மற்றும் லோகேஷ் இணைந்துள்ள படத்தைப் அந்நிறுவனம் பகிர்ந்துள்ளது. இணையத்தில் வைரலாகி உள்ள இந்த போஸ்டரில், ஸ்ருதியிடம் காதல் பார்வை பார்க்கும் வகையில் லோகேஷ் கனகராஜ் இருப்பதால் என்ன என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்
மாநகரம், கதை, மாஸ்டர், விக்ரம் என குறுகிய காலத்திலேயே பெரிய இயக்குனராக வளர்ந்தவர் லோகேஷ் கனகராஜ். விக்ரம் படத்தின் இவரின் மேக்கிங் அவருக்கென தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கியது. லோகேஷ் ஒரு புதுமையான உலகத்தை காட்டுவதால் லோக்கி யூனிவர்ஸ் என சிலர் சொல்லி அது இணையத்தில் பிரபலமானது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்: விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜயை வைத்து அவர் இயக்கிய படமான லியோ தமிழ் சினிமாவில் இதுவரை எந்த படத்துக்கும் இல்லாத அளவுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சமூகவலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் லியோ படம் பற்றியே அதிகம் விவாதிக்கப்பட்டது. இதுவே படத்திற்கு பெரிய ஹைப்பை உருவாக்கியது. அதேநேரம், அதுவே படத்திற்கு எதிர்மறையாகவும் மாறியது. ஏனெனில் படம் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. குறிப்பாக படத்தின் இரண்டாம் பாகத்தில் திரைக்கதை அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை என்று பலரும் கருத்தை சொல்லவே லோகேஷ் கனகராஜும், அதை ஒத்துக்கொண்டார்.

தலைவர் 171: தற்போது ரஜினியின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும், , சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இது ரஜினி ரசிகர்களுக்கு மிகவும் சந்தோஷத்தை ஏற்படுத்தியது. ஏனெனில், லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடித்தால் அது வேறலெவலில் இருக்கும் என எல்லோரும் எதிர்பார்த்துள்ளனர். ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ஆகியோரும் ரஜினியுடன் நடித்து வருகின்றனர். வேட்டையன் படப்பிடிப்பு இப்படம் முடிந்தபின் ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
ஸ்ருதி ஹாசன் லோகேஷ்கூட்டணி: இது ஒரு புறம் இருக்க, கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் ஃபிலிம்ஸ் ஸ்ருதி ஹாசனுடன் புதிய புராஜெக்ட் ஒன்றில் கை கோர்த்துள்ளார் லோகேஷ் கனகராஜ். லோகேஷ் கனகராஜூம், ஸ்ருதியும் சேர்ந்து இருக்கும் போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த போஸ்டரில், Inimel Delulu is the New Solulu என்று குழப்பான கேப்ஷன் இடம்பெற்றுள்ளது.இது திரைப்படமா? அல்லது ஸ்ருதிஹாசனின் ஆல்பம் பாடலை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறாரா? இல்லை நடிக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை ஸ்ருதிஹாசனை வைத்து லோகேஷ் கனகராஜ், ராஜ்கமல் தயாரிப்பில் படத்தை இயக்கப்போகிறாரா என பல கேள்விகளை இணையத்தில் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











