நடிக்க வந்து 10 ஆண்டுகள் ஆச்சு: ஸ்ருதி ஹாஸன் உருக்கமான ட்வீட்

By Siva

சென்னை: தான் படங்களில் நடிக்க வந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில் ஸ்ருதி ஹாஸன் உருக்கமான ட்வீட் போட்டுள்ளார்.

உலக நாயகன் கமல் ஹாஸனின் மூத்த மகளான ஸ்ருதி பெற்றோர் வழியில் நடிக்க வந்தார். அவர் கடந்த 2009ம் ஆண்டு வெளியான லக் இந்தி படம் மூலம் நடிகையானார். அதன் பிறகு இந்தி தவிர்த்து தெலுங்கு, தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

Actress Shruti Haasan completes 10 years

சூர்யாவின் 7ம் அறிவு படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு அவர் ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷுடன் ஜோடி சேர்ந்த 3 படத்திற்காக பாராட்டுகளை பெற்றார். விஷாலுடன் சேர்ந்து பூஜை, விஜய்யுடன் புலி, அஜித்துடன் வேதாளம், மீண்டும் சூர்யாவுடன் சேர்ந்து சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்தார்.

லண்டனை சேர்ந்த நாடக கலைஞர் மைக்கேல் கார்சேலை காதலித்த ஸ்ருதி படங்களில் இருந்து ஒரு குட்டி பிரேக் எடுத்தார். காதல் முறிந்த பிறகு மீண்டும் படங்களில் முழுக்கவனம் செலுத்தி வருகிறார்.

அவர் தற்போது எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வரும் லாபம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது தவிர இந்தி படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறார். அண்மையில் வெளியான விக்ரமின் கடாரம் கொண்டான் படத்தில் பாட்டு பாடி அசத்தினார். நடிப்பதுடன் ஸ்ருதி அருமையாக பாடவும் செய்வார். இந்நிலையில் தான் நடிக்க வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டதையடுத்து தனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் ஸ்ருதி ஹாஸன் நன்றி தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார்.

நான் திரையுலகில் ஒரு நடிகையாக இன்றுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறேன். நான் நிறைய கற்றுக் கொண்டேன். நான் கடினமாக உழைப்பேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன். மேலும் சிறப்பாக செயல்பட்டு என்னை ஆதரிக்கும் அனைவரையும் பெருமையடையச் செய்வேன். நான் ஒரு நடிகையாகவும், தனி நபராகவும்ம் நிறைய மாறிவிட்டேன். ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் நன்றி என்று மனதார நன்றி தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார் ஸ்ருதி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X