உங்களை அதிகமா சிரிக்க வைக்கிறவங்க உங்க அப்பாவா இருந்தா சிறப்பானது... ஸ்ருதி பாராட்டு

சென்னை : நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக தனது வீட்டில் முடங்கியுள்ளார்.

லாக்டவுன் ரிலீஸ் ஆனவுடன் இவர் தமிழ் உள்ளிட்ட படங்களின் சூட்டிங்கில் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்நிலையில் தந்தையர் தினத்தையொட்டி அவர் தனது அப்பா கமல்ஹாசனுக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

சிறப்பான பெயர்

சிறப்பான பெயர்

பாடகி, மியூசிக் டைரக்ஷன் மற்றும் நடிகை என திரைத்துறையில் பன்முகம் காட்டி வருபவர் ஸ்ருதிஹாசன், நட்சத்திர தம்பதியின் மகள் என்ற நினைவில்லாமல் தன்னுடைய திறமைகளை வெளிக்கொண்டு வந்து சிறப்பான பெயரை பெற்று வருகிறார். கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்திற்கு இவர் இசையமைத்தார்.

சிறப்பான உறவு

சிறப்பான உறவு

இவர்களின் பெற்றோர் விவாகரத்தாகியுள்ள நிலையில், இருவரிடமும் சிறப்பான உறவை கொண்டுள்ளார். இருவருடனும் மாறி மாறி தங்கி தன்னுடைய சினிமா கேரியரை தொடர்ந்து வருகிறார். குறிப்பாக தன்னுடைய தந்தை உலகநாயகன் கமல்ஹாசனின் விருப்பத்திற்குரிய மகளாக விளங்கி வருகிறார்.

அப்பா கமலுக்கு வாழ்த்து

இந்நிலையில் தந்தையர் தினத்தையொட்டி தனது தந்தை கமல்ஹாசனுடன் தான் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளார். மேலும் யாரிடம் நீங்கள் அதிகமாக கற்றுக் கொள்கிறீர்களோ அவர் உங்களது அப்பாவாக இருப்பது பெரிய பாக்கியம் என்று தெரிவித்துள்ளார்.

Recommended Video

DEPRESSION ல செத்தே போயிருப்பேன் | Actress Sona Chat Part-01 | Filmibeat Tamil
லாக்டவுனில் ஸ்ருதிஹாசன்

லாக்டவுனில் ஸ்ருதிஹாசன்

தொடர்ந்து யார் உங்களை அதிகமாக சிரிக்க வைக்கிறாரோ அவர் உங்களுடைய அப்பாவாக இருப்பது சிறப்பானது என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். கூடவே லவ் எமோஜியையும் பதிவிட்டுள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இவர் சில படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X