கனத்த இதயத்தோடு விடை தருகிறோம்.. எஸ்பி ஜனநாதன் மறைவு.. நடிகை ஸ்ருதி ஹாசன் உருக்கம்!

சென்னை: எஸ்பி ஜனநாதன் மறைவு குறித்து நடிகை ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Recommended Video

கனத்த இதயத்தோடு விடை தருகிறோம் | SP JANANATHAN Last rites

இயற்கை, ஈ, பேராண்மை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்பி ஜனநாதன் நேற்று காலமானார்.

கடந்த வியாழக்கிழமை அவருக்கு திடீரென மூளைச்சாவு ஏற்பட்ட நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மயிலாப்பூர் வீட்டில் அஞ்சலி

மயிலாப்பூர் வீட்டில் அஞ்சலி

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று எஸ்பி ஜனநாதன் மருத்துவமனையில் உயிரிழந்தார். எஸ்பி ஜனநாதனின் உடல் சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

கடைசியாக லாபம்

கடைசியாக லாபம்

அவரது உடலுக்கு திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். எஸ்பி ஜனநாதன் கடைசியாக விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசனை வைத்து லாபம் படத்தை இயக்கினார்.

ஸ்ருதி ஹாசன் உருக்கம்

ஸ்ருதி ஹாசன் உருக்கம்

அந்தப் படத்தின் எடிட்டிங் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் எஸ்பி ஜனநாதன் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் எஸ்பி ஜனநாதனின் மறைவு குறித்து லாபம் படத்தின் ஹீரோயினான ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

ஒரு புரட்சி போல..

ஒரு புரட்சி போல..

அவர் பதிவிட்டிருப்பதாவது, "கனத்த இதயத்தோடு எஸ்.பி.ஜனநாதன் சாருக்கு விடை தருகிறோம். உங்களைப் பற்றி அறிந்துக் கொண்டதும் உங்களுடன் பணியாற்றியதும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது! ஒவ்வொரு நாளும் ஒரு புரட்சி போல உங்கள் வாழ்க்கையை வாழ்ந்தீர்கள்.

எண்ணங்களில் இருப்பீர்கள்

எண்ணங்களில் இருப்பீர்கள்

நீங்கள் ஊக்கமளிப்பவராகவும், அன்பானவராகவும் இருந்தீர்கள். அனைத்திற்கும் நன்றி. நீங்கள் எப்போதும் என் எண்ணங்களில் இருப்பீர்கள். அவருடைய குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X