Inmel song: வெளியானது ஸ்ருதிஹாசன் -லோகேஷின் இனிமேல் டீசர்.. மெயின் பாடல் எப்போ தெரியுமா?

சென்னை: அடுத்தடுத்த முன்னணி ஹீரோக்களுடன் தன்னுடைய படங்களை இயக்கி வெற்றிப்படங்களாக கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என 5 படங்களை இயக்கியுள்ள லோகேஷ், அடுத்ததாக ரஜினிகாந்த்துடன் தலைவர் 171 படத்திலும் இணைந்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதத்தில் துவங்க உள்ளதாகவும் அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் தற்போது லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனிடையே நடிகை ஸ்ருதிஹாசன் இசையமைத்துள்ள இனிமேல் என்ற ஆல்பம் பாடலில் லோகேஷ் கனகராஜ் அவருடன் இணைந்து நடித்துள்ளார்.

ரஜினிகாந்தின் தலைவர் 171 படம் குறித்த அப்டேட்களை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள் இனிமேல் ஆல்பம் பாடலின் அப்டேட்களை தினந்தோறும் பார்த்து வருகின்றனர். தற்போது இதன் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதில் முற்றிலும் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளே இடம்பெற்றுள்ளன. இந்தப் பாடலின் வரிகளை நடிகர் கமல்ஹாசன் எழுதியுள்ளதுடன் அவரது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.

Actress Shruti haasan amp amp lokesh Kanagaraj s Inimel album song s teaser released

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்: மாநகரம் என்ற படத்தில் துவங்கியது இயக்குனர் லோகேஷ் கனகராஜின் திரைப்பயணம். முன்னதாக இயக்குனர்கள் யாரிடமும் பயிற்சி பெறாமல் நேரடியாக குறும்படங்கள் இயக்கிய அனுபவத்தை கொண்டு மாநகரம் படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ். அவருக்கு இந்தப்படம் சிறப்பாக கை கொடுத்தது. திரைக்கதையிலும் வித்தியாசத்தை கொடுத்தது. தொடர்ந்து கார்த்தியுடன் கைதி, விஜய்யுடன் மாஸ்டர் மற்றும் லியோ மற்றும் கமல்ஹாசனுடன் விக்ரம் ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். அடுத்ததாக ரஜினிகாந்துடன் தலைவர் 171 படத்திலும் இணையவுள்ளார். இந்த படத்தின் சூட்டிங் அடுத்த மாதம் துவங்க உள்ளதாக முன்னதாக தனது பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தலைவர் 171 படம்: இதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் தற்போது ஈடுபட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகளும் நடந்து வருகிறது. இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசனுடன் இணைந்து இனிமேல் என்ற ஆல்பம் பாடலில் நடித்து முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசன் இந்த ஆல்பம் பாடலுக்கான வரிகளையும் எழுதி தயாரித்தும் உள்ளார். இந்நிலையில் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார் ஸ்ருதிஹாசன். இந்த பாடலின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி வரும் சூழலில் இன்றைய தினமும் இதன் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

25ம் தேதி ரிலீசாகும் பாடல்: வரும் 25ம் தேதி இந்த ஆல்பம் பாடல் ரிலீசாக உள்ளதாக கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வீடியோ பாடலின் டீசரில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் ரொமான்ஸ் மட்டுமே உள்ளது. இவர்களுக்கிடையிலான கெமிஸ்ட்ரி இந்த ஆல்பம் பாடலில் மிகச் சிறப்பாக அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. சில கலவையான விமர்சனங்களையும் இந்த ப்ரோமோ பெற்றுள்ளது. தலைவர் 171 படத்தில் கவனம் செலுத்தி வரும் லோகேஷ், அதன் பணிகளை மேற்கொள்ளாமல் இந்த ஆல்பம் பாடலில் இணைந்துள்ளது குறித்து அவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

ரசிகர்கள் விமர்சனம்: கடந்த ஆண்டில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தின் இரண்டாவது பாதி ரசிகர்களை கவர தவறியது. இதை தன்னுடைய பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜும் ஒப்புக்கொண்டார். இந்த தவறுகளை கலைந்து தலைவர் 171 படத்தை மிகச் சிறப்பாக கொடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே படத்தின் வேலைகளில் கவனம் செலுத்தாமல், இதுபோன்ற பாடல்களில் அவர் கவனம் செலுத்துவதும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. முன்னதாக சிங்கப்பூர் சலூன் படத்திலும் அவர் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X