அவமானப்படுத்த முயற்சிப்பதில் பலன் இல்லை... ஸ்ருதிஹாசன் சரியான பதிலடி!

சென்னை: நடிகை ஸ்ருதிஹாசன் மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாக பேட்டி ஒன்றில் பேசியது, சோஷியல் மீடியாவில் விவாதப்பொருளாக மாறியதை அடுத்து அதற்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகை ஸ்ருதி ஹாசன், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான ஏழாம் அறிவு படத்தின் மூலம் ஹிரோயினாக அறிமுகமானார்.

இவர் நடித்த முதல் படமே இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்ததை அடுத்து, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஷால், தனுஷ் போன்றோர்களுடன் ஜோடிப்போட்டு நடித்தார்.

actress shruti haasan reply to netizens

கமல்ஹாசன் மகள்: இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் கணிசமான படங்களில் நடித்துள்ள இவருக்கு தமிழில் வாய்ப்பு குறைந்ததை அடுத்து, தெலுங்கு பக்கம் சென்று அங்கு கணிசமான படங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில் கடைசியாக அவர் வால்டர் வீரய்யா, வீரசிம்ஹா ரெட்டி போன்ற படத்தில் நடித்தார். ஹாய் நன்னாவில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ஸ்ருதி ஹாசன், "மான்ஸ்டர் மெஷின்" என்ற ஆல்பத்தையும் வெளியிட்டுள்ளார்.

காதலருடன் மும்பையில்: ஸ்ருதி ஹாசனின் தந்தை சினிமா, அரசியல் என பிஸியாக இருக்கும் போது, இவர் தனது காதலர் சாந்தனுவுடன் மும்பையில் செட்டிலாகி விட்டார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வரும் நிலையில், இவர்கள் இருவர் குறித்தும் அடிக்கடி கிசுகிசு சோஷியல் மீடியாவில் வந்து கொண்டு தான் இருக்கிறது.

சலார்: தற்போது,ஸ்ருதி ஹாசன், இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள சலார் படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் டிசம்பர் 22ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.

ஸ்ருதி பேட்டி: இந்த படம் குறித்து ஸ்ருதி அளித்த பேட்டியில் எட்டு ஆண்டுகள் மதுவுக்கு அடிமையாக இருந்தேன். அந்த நாட்களில் பார்ட்டிக்கு சென்றால், நான் நிதானமாக இருக்கமாட்டேன். நண்பர்களுடன் குடிப்பதை பெருதும் விரும்பினேன். ஆனால், நான், ஒரு போதும் போதைப்பொருளை பயன்படுத்தியது இல்லை. தற்போது அதிலிருந்து மீண்டு இருக்கிறேன் என வெளிப்படையாக பேசி இருந்தார்.

சரியான பதிலடி: ஸ்ருதி மதுவிற்கு அடிமையாக இருந்தேன் என்று சொன்னதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்ததை அடுத்து, ஸ்ருதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், எனது நிதானம் பற்றி பேசும் கட்டுரைகளால் என்னை அவமானப்படுத்த முயற்சிப்பது பலன் அளிக்காது. வாழ்க்கை நன்றாக இருக்கிறது. கடவுள் கனிவானவர் என்று ட்ரோல் செய்த ரசிகர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X